உபியில் பாஜகவின் வெற்றி மின்னணு மோசடியே – அதிரவைக்கும் தகவல்கள்

தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் வலைதளம், லிஜியன் ஹேக்கர் குழுவால் முடக்கப்பட்டது.

அமெரிக்கா, ஸ்வீடன், கனடா போன்ற நாடுகளில் உள்ள ஹேக்கர்கள் மூலம் செயல்பட்டு வரும் ஹேக்கர் குழு லிஜியன். அரசு நிறுவனங்கள் மற்றும் மதம் தொடர்பான வலைதளப்பக்கங்களை ஹேக் செய்வது லிஜியனின் பணி. இந்த லிஜியன் குழு ஏற்கெனவே ராகுல் காந்தி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் ட்விட்டர் கணக்குகளை ஹேக் செய்துள்ளது.

இந்நிலையில், தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ நாளேடான, முரசொலியின் வலைதளப்பக்கத்தை, லிஜியன் ஹேக்கர் குழு இன்று முடக்கியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குத் தடை விதித்து, ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று அதில் லிஜியன் குறிப்பிட்டுள்ளது.

முக்கியமாக, உத்தரப்பிரதேசத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் லிஜியன் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்கு இயந்திரம் குறித்த வீடியோ ஒன்றையும், அதில் லிஜியன் இணைத்துள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் லிஜியன் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து சற்று நேரத்தில், வலைதளம் மீட்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றவுடனே இக்குற்றச்சாட்டு எழுந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கே ஓட்டு விழும் வகையில் மோசடி செய்து அந்த கட்சி வெற்றியைப் பறித்துள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.

அவர் மட்டுமின்றி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

அவர், ஆம் ஆத்மியினுடைய 20-–25 சதவீத வாக்குகள் அகாலி–-பாஜக கூட்டணிக்கு விழுந்துள்ளன. வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதால் சில வெளிநாடுகளில் இயந்திர வாக்குப்பதிவு தடை செய்யப்பட்டுள்ளது. நியாயமான தேர்தல் இந்தியாவிலும் நடைபெற வேண்டும் என்றால் அதே நடைமுறையை கைவிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

இப்போது முரசொலி இணையதளம் முடக்கப்பட்ட நிகழ்வும் நடந்திருப்பதால், மின்னணு வாக்குப்பதிவில் மோசடி செய்யமுடியும் என்பது தெரியவருகிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது உ.பியில் பாஜகவின் வெற்றி மின்னணு மோசடியால் மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response