தணிக்கையில் தப்பிய ‘சத்ரியன்’..!


‘சுந்தரபாண்டியன்’ புகழ் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள படம் ‘சத்ரியன்’… அவரது முந்தைய இரண்டு படங்களுமே குடும்பங்களை மையப்படுத்தி வெளியான நிலையில் சத்ரியன்’ கேங்ஸ்டார் படமாக உருவாகியுள்ளது.

ஆனாலும் இந்தப்படத்துக்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணமும் இருக்கிறது. இந்தப்படத்தின் கதையே ரவுடியிசம், கேங்ஸ்டர் என்ற அடிப்படையில் அமைந்தாலும். குடும்ப ரசிகர்களுக்காக திரைக்கதையில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்..

படம் பார்த்து முடித்த சென்சார் அதிகாரிகள் ‘இந்த ஆண்டு நாங்கள் பார்த்ததிலேயே ஒரு முழுமையான படம் இது என்று பாராட்டியதோடு, ஒரு நூலிழை மிஸ் ஆகியிருந்தாலும் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தர வேண்டியிருந்திருக்கும். அது ஏற்பட்டிராத அளவுக்கு நீங்கள் காட்சியமைப்பில் உழைத்திருந்தது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்தது” என்று மனமார பாராட்டினார்களாம்.

Leave a Response