மீனவர்களைக் கொல்லும் இலங்கை மீது போர் தொடுக்கவேண்டும்- மே17 இயக்கம்


இலங்கை செய்தது பச்சைப்படுகொலை. ஒப்பந்தங்களை மீறுவதும், விசாரணையின்றியும், நீதிமுறையின்றியும் கொலை செய்திருக்கிறது. இந்தியாவின் இறையாண்மையை மீறிய செயல் இது. இந்த செயலுக்கு இலங்கை மீது அரசு போர் தொடுக்க வேண்டும்.

இறையாண்மை என்பது மக்களுக்கானது. அரசை மக்களே படைக்கிறார்கள். தங்களது இறையாண்மையின் கூறான வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே அரசை உருவாக்கி அதற்கு அதிகாரத்தை கொடுக்கிறார்கள் மக்கள். இதனாலேயே அரசுகள் தேர்ந்தெடுக்கப்படுவதாக போலி இந்திய சனநாயகம் கூறுவது உன்மையெனில், இறையாண்மை மீறப்படும் போது அதை பாதுகாப்பதும், அத்துமீறல் மீது நடவெடிக்கை எடுப்பதும் அந்த அரசின் கடமை. மக்கள் அப்படியாகவே அரசிற்கு உத்திரவிடுவார்கள்.

ஆனால் இலங்கை அரசு தமிழ்த்தேசிய மக்களின் இறையாண்மையை தொடர்ந்து மீறுகிறது எனில் இந்திய அரசு பாதுகாக்கும் நடவெடிக்கை எடுப்பது கட்டாயம். இலங்கை அரசின் மீது நடவெடிக்கை எடுக்காமல் தவிற்பதற்கு இந்திய அரசிற்கு உரிமையோ, அதிகாரமோ கிடையாது. ஏனெனில் இந்திய அரசின் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது.

இப்படி இறையாண்மையை ஒரு அண்டை அரசு மீறுமெனில் அதன் மீது நடவெடிக்கை எடுத்து கொலை செய்யப்பட்ட தன் நாட்டு குடிமக்களுக்கான உரிய பாதுகாப்பை வழங்குவதே அரசின் கடமை. இந்த கடமையிலிருந்து இந்திய அரசு தவறி இருக்கிறது. இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறது எனில் இது திட்டமிடப்பட்ட குற்றமாகும். தமிழக மக்களின் இறையாண்மையை இந்திய அரசு மீறுகிறதெனில் இந்திய அரசு சட்டவிரோத, அரசியல் சாசன விரோத அரசாக இருக்கிறது என்று அர்த்தம்.

இப்படியாக இறையாண்மையை மீறும் அரசின் மீதும், அதிகாரிகளின் மீதும் நடவெடிக்கை எடுக்கும் உரிமை நமக்கும் உண்டு. இந்த உரிமையை இந்திய நீதிமன்றங்கள் உறுதி செய்திட வேண்டும்.

இப்படியான சூழலில் இலங்கை அரசின் மீது கொலைக்குற்றச்சாட்டை பதிய வைப்பதே அரசின் உடனடி நடவெடிக்கையாக இருக்கவேண்டும். ஆனால்; 600க்கும் மேற்பட்ட மீனவர் கொலைக்கு பின்னரும் கொலை வழக்கை பதிவு செய்ய இந்திய அரசு மறுக்கிறது.

தமிழகத்தில் இருந்து அறிக்கை விடும் அதிமுக, திமுக சுரண்டல் கட்சிகள் மீனவர் நட்ட ஈட்டையும், சிகிச்சை குறித்து மட்டுமே பேசிச் செல்கிறார்கள். வாய்மொழி கண்டனத்தை இந்திய அரசின் மீது பதிவு செய்து இந்திய பிரதமர் மீதோ அமைச்சர்கள் மீதோ குற்றச்சாட்டை பதிவு செய்வதில்லை. பாராளுமன்றத்திலும் எதிர்ப்பினை பதிவு செய்து முடக்குவதில்லை. இலங்கை அரசின் மீது கொலைக்குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவேண்டுமென்கிற கோரிக்கையை தப்பி தவறி கூட அதிமுகவும், திமுகவும் அறிக்கையாக கூட வெளியிடாமல் கவனமாக தவிர்க்கிறார்கள்.

இந்த இரண்டு கட்சிகளின் ஒத்துழைப்பிலேயே இந்திய அரசு திமிருடன் தனது கடமை மீறுகிறது. ஆட்சி கலைக்கவோ, ஆட்சியை காப்பாற்றவோ டில்லி செல்லும் இந்த கும்பல்கள், இந்திய அரசின் செயலற்ற தன்மையை கண்டிக்கவோ, போராடவோ செல்வதில்லை.

இலங்கை அரசின் மீது கொலைக்குற்ற வழக்கை பதிவு செய்யும் குறைந்த பட்ச கோரிக்கை கூட வைக்காத இக்கட்சிகளே இந்திய அரசிற்கு கள்ள ஆதரவை வழங்குகிறது. இதனாலேயே இந்திய அரசின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கிறது. ஒருவகையில் இலங்கைக்கு இங்கிருக்கும் பெரிய அதிகாரத்தில் இருந்த அதிமுக், திமுக கட்சிகளின் அயோக்கியத்தனமே காரனம்.

தமிழ்த் தேசிய இனமக்களின் இறையாண்மையை மீறும் இலங்கை அரசும், இறையாண்மையை பாதுகாக்க மறுக்கும் இந்திய அரசும் சட்டவிரோத குற்றவாளி அரசுகளே.

இந்த அரசுகளிற்கு நெருக்கடி கொடுக்காமல் தவிர்க்கும் அதிமுக திமுக கட்சிகள் தமிழகத்தின் உண்மையான பிரதிநிதிகள் அல்ல. மாறாக இவர்கள் இருவரும் இலங்கை-இந்திய கொலைக்கூட்டணிக்கு மறைமுக ஆதரவை கொடுப்பவர்கள்.

இக்கட்சிகளை, அரசுகளை புறக்கணித்துவிட்டு, மக்கள் திரள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் தோழர்களே.

போராட்டமே நமக்கான உரிமையை பெற்றுத்தரும்.

வீதிக்கு வா தமிழினமே. நாம் உண்ணும் ஒவ்வொரு மீனிலும் நம் மீனவனின் ரத்தம் படிந்திருக்கிறது எனும் உண்மையை உணர்வோம். நமக்கு உணவிடும் விவசாயிகள், மீனவர்களை பாதுகாக்க வீதிக்கு வா …

போராட்டம் பரவட்டும்.

இந்திய பொறுக்கி அரசினை சனநாயக மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் எதிர்கொள்வோம்.

மே பதினேழு இயக்கம்.

படம்: மதுரை போராட்டத்தில் தோழர்கள்.

Leave a Response