பேரறிவாளனுக்குத் தடை, சிறைத்துறை செய்தது சரியா?

சென்னை புழல் மத்திய சிறையில் 16.01.2015 வெள்ளிகிழமை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைவாசிகள் அழைத்துவரப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து பேரறிவாளன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழு புழல் மத்திய சிறைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு ஒப்புதலுக்கு சென்னை சிறைத்துறை தலைவர் திரிபாதியின் அனுமதிக்கு அனுப்பட்டது. ஆனால் சிறைத்துறை தலைவர் பேரறிவாளன் மட்டும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு மற்ற நான்கு சிறைவாசிகளும் அனுமதி வழங்கப்பட்டு சென்னை புழல் சிறைக்கு 13.01.2015 அன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

1991 முதல் இருபத்தி நான்கு ஆண்டுகளாக சிறைத்துறையின் நன்னடத்தை விதிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் பேரறிவாளனுக்கு எந்த வித முகாந்திரமும் இல்லாமல் தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது. இதனால் பேரறிவாளன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

நமக்கெழும் ஒரே கேள்வி சீர்படுத்த வேண்டியது சிறைவாசிகளையா? அல்லது சிறைத்துறையையா?

–  சிவகுமார் சிவா

Leave a Response