ராஜபக்சேவின் ஜோசியக்காரனும் தப்பியோட்டம்

இலங்கை தேர்தல் தோல்விக்குப் பின் ராஜபக்சேவும் அவன் மனைவியும் உலகில் எந்த நாட்டில் பாதுகாப்போடு இருக்கமுடியும் என்ற அச்சத்தில் எங்கோ ஒளிந்து திரிகின்றனர் …

கொலைகாரனின் தம்பி மலேஷியாவிற்கு ஓடி அங்கே நுழையவிடாமல் தடுக்கப்பட்டதால் மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளான் …

கொலைகாரனுக்கு பெரும் உதவியாக இருந்த அவரின் மூத்த மகன் சீனாவின் காலில் விழுந்து அந்தநாட்டில் இருப்பதற்கு அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறான் ..

இன்னொரு பாவ மகன் ஆஸ்த்ரேலியாவின் காலில் விழுந்து புரண்டு அடைக்கலம் கேட்டுக்கொண்டிருக்கிறான் ..

இப்படி ராஜபக்சேவின் குடும்பம் மட்டுமின்றி அவர்களின் குடும்பசோதிடரும் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றதாகச் செய்தி.

அச்செய்தி…..

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டது, தேர்தல் நாளை நிர்ணயித்தது, மகிந்த ராஜபக்சவின் வேட்புமனுவுக்கான நேரத்தை தீர்மானித்து, வாக்களிக்கச் செல்வதற்கான நேரத்தை தீர்மானித்தது என எல்லாவற்றையும் மகிந்த ராஜபக்சவின் சோதிடரான சுமணதாசவே மேற்கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த 8ம் திகதி மிகவும் நல்ல நேரம் என்றும், அது அவருக்கு ராஜ யோகத்தை அளிக்கும் என்றும் நம்பிக்கை ஊட்டிய அவரை, மேற்குலக ஊடகங்கள் பலவும், ராஜசோதிடர் என்றே குறிப்பிட்டன.

இவரை மையப்படுத்தி, பிரபல ஊடகங்கள் தேர்தலுக்கு முன்னரும் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவரது பேச்சை நம்பி, மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே தனது பதவியை இழந்துள்ளதையடுத்து. சுமணதாச அபேகுணவர்த்தன சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

ஊடகங்களும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் எழுப்பும் கேள்விகளில் இருந்து தப்பிக்கவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Leave a Response