இந்திய, தமிழக அரசுகள் மீது ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து நடத்திய அறப்போராட்டத்தின் ஏழாவது நாள் தமிழக அரசு காவல்துறை மூலம் நடத்திய கொடூர தடியடி தாக்குதலினால் ஏற்பட்ட வன்முறையில்,

1. நடந்த மிகக் கடுமையான மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்து விசாரிக்கவும்.

2. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவும்.

3. அமைதி வழி போராட்டத்தை வன்முறையை கொண்டு அடக்கிய அரசை எதிர்த்தும் .

4. இனிமேல் எப்போதும் அமைதி வழி போராட்டங்களைத் தமிழக அரசு அல்லது இந்திய அரசு வன்முறையைக் கொண்டு அடக்க கூடாது என வலியுறுத்தியும்.

5.. தமிழ் மக்களின் உரிமைகளைத் தமிழக அரசும், இந்திய அரசும் எப்போதும் பாதுகாக்க கோரியும்.

6. மக்களின் உரிமைகளை அரசு காக்காத போது அமைதி வழி போராட்டத்தில் மக்கள் இறங்க எப்போதும் அனுமதி வழங்க கோரியும் .

ஜெனீவா ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் சார்பாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால் நியுமன் அவர்கள், சல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மிக தெளிவாக விளக்கி புகார் மனு ஒன்றை கடந்த 31-01-2017 அன்று நேரில் சென்று அளித்துள்ளார்.

அதன் நகல் இணைக்கப்பட்டுள்ளது https://goo.gl/JMWjVc

Leave a Response