ரஜினி ரசிகையாக மாறிய நிக்கி கல்ராணி..!


தமிழில் தற்போதைக்கு பிசியான நடிகை யார் என்றால் முதல் ஆளாக நிக்கி கல்ராணியை நோக்கி கைகாட்டலாம். காரணம் `மொட்ட சிவா கெட்ட சிவா’, `மரகத நாணம்’, `கி’, `ஹரஹர மகாதேவகி’ உள்ளிட்ட பல படங்கள் நிக்கியின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மலையாள படத்திலும் நிக்கி நடித்து வருகிறார்.

ஆதி-நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள `மரகத நாணயம்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தற்போது நிக்கி – விக்ரம் பிரபுவுடன் இணைந்து `நெருப்புடா’ படத்தில் நடித்து வருகிறார். அசோக் குமார் இயக்கும் இப்படத்தை சீன் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நிக்கி தனது அடுத்த படத்தில் மீண்டும் விக்ரம் பிரபுவுடன் இணைய உள்ளார். நிக்கியின் 25-வது படமான அந்த படத்திற்கு `பக்கா’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்றிலம் பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட உள்ள இப்படத்தில் நிக்கி சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகையாக நடிக்க உள்ளாராம்.

Leave a Response