அவசர சட்டம் செல்லாது.. உண்மையை உடைக்கும் வழக்கறிஞர்!

சட்டம்.. அவசரச் சட்டம்.. நிரந்தரச்சட்டம்..

சரியான சட்டம்.. சில விளக்கங்கள் என்று வழக்குரைஞர் அருள்மொழி எழுதியுள்ள கட்டுரையில்..

எல்லா சட்டத்திற்கும் அடிப்படை உரைகல் அரசியல் சாசனம் தான்.

மத்திய அரசோ,மாநில அரசோ எந்தத் துறைக்கு எப்படி சட்டமியற்றலாம் என்கிற அதிகார விளக்கத்தை அரசியல் சாசனம் அளிக்கிறது.

அப்படி உருவாக்கும் சட்டங்கள் அரசியல்சாசனத்தின் எந்த ஒரு பிரிவிற்கும் எதிராக இருந்தால் அந்த சட்டமோ அல்லது அந்தக் குறிப்பிட்ட சட்டப்பிரிவோ செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துவிடும்..ஏனெனில் மத்திய அரசின் சட்டத்தைவிட அரசியல் சாசனம் உயர்ந்தது.

அதேபோல் மத்திய அரசு இயற்றியுள்ள ஒரு சட்டத்திற்கு எதிராகவோ அல்லது அதிலிருந்து முரண்பட்டோ மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றும்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் மாநில அரசின் சட்டம் செல்லாது என்றுதான் நீதிமன்றம் அறிவிக்கும். ஏனெனில் இங்கே மத்திய அரசின் சட்டமே உயர்ந்தது.

இந்த அடிப்படையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மாடுபிடிக்கும் சல்லிக்கட்டு சட்டத்தைப்பற்றிப் பார்ப்போம்.

இந்திய அரசு 1960 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஒரு சட்டம்தான் துன்புறுத்தலில் இருந்து விலங்குகளயைக் காப்பாற்றும் சட்டம் 1960.Prevention of Cruelty to Animals Act 1960 (PCA Act). அந்த சட்டத்தின் காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகளின் பட்டியலில் காளைமாடு சேர்க்கப்பட்டுள்ளது. அதை சேர்த்தது காங்கிரஸ் ஆட்சிதான். அதனை தி.மு.கவும் கவனிக்காமல் விட்டது பிழையே. அதனை சரிசெய்ய தி.மு.க ஆட்சியில் இருந்தவரை் ஒரு விதிமுறையை வகுத்து மூன்று ஆண்டுகள் சல்லிக்கட்டு நடத்தியது.
அதன் பிறகுதான் உச்சநீதிமன்றம் இந்த விதிமுறைகள் மத்திய சட்டம் PCA Act 1960 க்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடக்கும் நேரத்தில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் அரசுதான் சல்லிக்கட்டுக்கு எதிரானது. ஆனால் அதனை ஆதரிப்பதாகச் சொல்லும் பி.ஜே.பி அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்றால் PCA சட்டத்தை திருத்தி காளையை அந்தப் பட்டியலில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.

அதனை மாநில அரசு செய்யமுடியாது. மத்திய அரசுதான் திருத்தவேண்டும். ஆனால் மத்திய பி.ஜே.பி அரசு சட்டத்திருத்தம் செய்யவில்லை.மாறாக 2015 ஆம் ஆண்டில் ஒரு சுற்றறிக்கை மூலம் அப்பட்டியலில் இருந்து காளைமாட்டை நீக்கியது.

சட்டத்தை சட்டம்போட்டுதான் திருத்த முடியும். சுற்றறிக்கை எனும் சர்குலர் மூலம் சட்டத்தைத் திருத்த முடியாது.

சட்டத்திருத்தம் செய்யவேண்டியு இடத்தில் சுற்றறிக்கையே போதும் என்று முடிவு செய்யும் அளவுக்கு சட்ட வல்லுநர்கள் இல்லாத கட்சியல்ல பி.ஜே.பி. ஆனால் தமிழர்களை ஏமாற்ற இது போதும் என்று நினைத்தார்கள் போலும். அந்த சுற்றறிக்கையைத்தான்் உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்தது. வேறென்ன செய்யும்?

இப்போது தமிழ் நாடு அரசு கொண்டுவந்துள்ள சட்டம் சட்டப்பேரவையில் முறையாக நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் நிறைவேறும் அது நிரந்தர சட்டம்தான். சட்டப்பேரவை கூடாத காலங்களில் அறிவிக்கப்படும் சட்டமே அவசரச் சட்டம் எனப்படும்.

சரி இப்போது என்ன பிரச்சனை..

மத்திய அரசு தனது சட்டத்தில் திருத்தம் செய்ய முன்வராத நிலையில் தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டாவோ டாட்டாவோ யார் வழக்கு தொடர்ந்தாலும் மத்திய சட்டத்திற்கு Central Act எதிராக மாநில அரசின் சட்டம் State Act இருக்கிறது என்று சொல்லி நீதிமன்றம் தலையிடவும் தடைசெய்யவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே இன்று நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் சட்டம் அவசரச்சட்டமா நிரந்தரச்சட்டமா என்பதல்ல பிரச்சனை. இந்த நிரந்தரம் சட்டம் நிரந்தரத் தீர்வாக என்பதுதான் கேள்வி?

இல்லை என்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 254.Article 254 of The Constitution of India.

இனி மீதியை அரசியல் திரையில் காண்க.

Leave a Response