அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டார் பார்த்திபன்..!


பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தநிலையில் தன்னுடைய படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் பார்த்திபன் அடுத்து இயக்கவிருக்கும் படத்திற்கு ‘முன்பதிவாய் ஒரு முத்தம்’ என்று தலைப்பு வைத்து அதை அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தை வருகிற தமிழ் புத்தாண்டு (ஏப்ரல்-14) அன்று வெளியிட முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் ஈடுபட்டுள்ள பார்த்திபன், ஒரு சில நாட்களில் இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்களாக யாரெல்லம் பணியாற்றவிருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளாராம்.

Leave a Response