நேரடியாக விஷயத்துக்கு வருவதென்றால், பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் 12ம் தேதி தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் விஜய் நடித்துள்ள பைரவா வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ரஷ்யா, போலந்து, நைஜீரியா, கானா, கென்யா உள்பட 55 நாடுகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.
இத்தனை நாடுகளில் இதனை ரிலீஸ் பண்ணுவதற்கு காரணமும் இருக்கிறது.. இதன்மூலமாக, கபாலி வசூலை பைரவா ஓவர்டேக் பண்ணிவிடலாம் என நினைத்துள்ளார்களாம். ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் ஆகியோர் நடிக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.