கார்த்தி படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்..!


‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் ஹெச்.வினோத். தனது இரண்டாவது படமாக கார்த்தியின் படத்தைத்தான் இயக்குகிறார் வினோத்… இதில் சிறப்பம்சம் என்னவென்றால் சிறுத்தை படத்தை தொடர்ந்து கார்த்தி மீண்டும் போலீஸ் அதிகாரியாக இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்திற்கு ‘தீரன் ; அதிகாரம் ஒன்று’ என பொருத்தமான தலைப்பைத்தான் வைத்துள்ளனர்..

மூன்று பேரை மையப்படுத்தி நகரும் திரைக்கதையில் முக்கியமான மர்மம் ஒன்றை போலீசார் துப்பறியும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். ஸ்டுடியோகிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்தி படத்திற்கு இவர் இசையமைப்பது இதுவே முதல்முறை.

Leave a Response