“ஏண்டா இப்படி பண்றே” ; பிரேம்ஜியை நொந்துகொண்ட இளையராஜா..!


இளையராஜாவை தங்கள் படத்தில் இசையமைக்க வைக்க முடியாதவர்கள், அவரது மகன் யுவன்சங்கர் ராஜாவை தேடி போவார்கள்.. இன்னும் சிலரோ, அவரது தம்பி மகன் பிரேம்ஜியிடம் கூட அவரைப்போலவே பாடல்கள் வாங்கிவிடலாம் என செல்லும் கூத்தும் நடக்கத்தான் செய்கிறதாம்.. இதுபற்றி தான் இசையமைத்துள்ள ‘அச்சமின்றி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பிரேம்ஜியே குறிப்பிட்டு பேசினார்..

“என்னிடம் இயக்குநர்கள் நீங்கள் இளையராஜா போன்று இனிமையான ட்யூன் போட்டு தர வேண்டும் என்று கேட்பார்கள். நான் அவரைப் போன்று டியூன் போட முடியாது. அவரைப் போன்று டிரெஸ் மட்டும்தான் போட்டுக் காட்ட முடியும் என்று சொன்னேன். சொன்னபடி ஒருநாள் வெள்ளை ஜிப்பா, வேஷ்டி போட்டுக்கொண்டு ருத்ராட்ச மாலைகளையும் மாற்றிக்கொண்டு ஆர்மோனியப் பெட்டியுடன் போஸ் கொடுத்தேன். அதை போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள். பெரியப்பா (இளையராஜா) வீட்டு வாசலிலும் ஒட்டிவிட்டார்கள். பெரியப்பா கூப்பிட்டுப் பேசினார்..

“என்னடா என்னை போல் டிரெஸ் போட்டு கிண்டல் பன்றியா?” என்று கேட்டார். அதற்கு நான், ‘இல்லை பெரியப்பா உங்களைப் போல இசையமைக்க சொன்னார்கள்… அது என்னால் முடியாது, வேண்டுமானால் அவரைப் போல டிரெஸ் போட்டு போஸ் கொடுக்கிறேன்’ என்று சொன்னேன். அதைதான் போஸ்டர் போட்டு ஒட்டிவிட்டார்கள் என்று சொன்னேன்,” என்றார்.

Leave a Response