திடீரென நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால்?

நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார். அப்போது நேதாஜியைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மேற்கு வங்க அரசின் உயர்கல்வி, பள்ளிக்கல்வி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் அமைச்சருமான முனைவர் பார்த்தா சட்டர்ஜி மற்றும் ஏராளமான மதிமுகவினர் பங்கேற்றனர்.

திடீரென  நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கு விடையளிக்கும் விதமாக தமிழோசை விசயகுமார் எழுதியள்ள கட்டுரை.
காங்கிரஸ் ஆட்சி என்பது நேரு குடும்பத்தாரின் ஆட்சியாக கடந்த 50 ஆண்டுகளாக இருந்தது, அப்போது அவருக்கு எதிரான அவரது பிரமதர் பதவிக்கு போட்டியாக இருந்தவர் சுபாஸ் போஸ், அவரது மரணம் குறித்தப் பல்வேறு விதமான வதந்திகள் உலவிக் கொண்டிருந்தன, அவர் விமான விபத்தில் இறக்கவில்லை, இன்னும் உயிரோடு இருக்கிறார் வெளிநாட்டில், இந்தியா திரும்பினால் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பிரிட்டிஸ் அரசுடன் நேரு ஒப்பந்தம் செய்துள்ளார் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் இருந்தன, பல ஆண்டுக் கோரிக்கைக்குப் பின்னர் இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து தகவல் திரட்ட ஒரு விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்தது, அதை வெளியிடாமல் காங்கிரஸ் மறைக்கிறது என்று பா.ச.க குற்றஞ்சாட்டி வந்தது,

நேருவுக்கு எதிரான அரசியலை உயர்த்திப் பிடித்த பா,ச,க, இன்று ஆட்சிக்கு வந்ததும் சிலர் அத்தகவல்களையும் அது குறித்த ஆவணங்களையும் வெளியிடச் சொல்லிக் கேட்டபோது மறுத்துவிட்டது, அதற்கு அது சொன்ன காரணம் முன்பு காங்கிரஸ் என்ன சொன்னதோ அதையே இப்போது இது முன்வைத்தது,

இதை வைகோ கூறக்காரணம் இவர் பா.ச.க.கூட்டணியில் இருந்து விலகிவிட்டார், பா.ச.க வை அம்பலப்படுத்த இந்தப் போராட்டம்,

வங்காளிகள் பிரச்சினையை இவர் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார், ஒரு விதத்தில் பா.ச.க.வின் முழக்கத்தையே இவரும் ஆதரிக்கிறார், தமிழனுக்கு இதில் எந்தப் பயனும் இல்லை, உண்மையில் சொல்லப் போனால் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து உயிரிழந்தவர்களில் 80 விழுக்காட்டினர் தமிழர்கள், அதற்கு ஆள்பிடிக்க முத்துராமலிங்கத் தேவரைப் பயன்படுத்திக் கொண்டார், வழக்கம்போல் தமிழர்கள் ஏமாந்தனர், அதனால்தான் இந்தியாவில் எங்கும் இல்லாத நேதாஜியின் பார்வர்டு பிளாக்குக்கு தமிழகத்தில் கட்சி,

2ஆம் உலகப் போரின் போது ஜப்பானுடன் உடன்பாடு கொண்டு இந்தியாவில் தனது ஆட்சியை ஏற்படுத்த போஸ் முயன்றார், அப்போது ஜப்பான் வேறொரு இரகசியத் திட்டத்தை வைத்து இந்தியாவைக் கைப்பற்ற ஒரு ரயில் பாதையை அமைத்தது, சுமார் 420 கி,மீ, தொலைவுள்ள இப்பாதையை அமைக்க கைது செய்யப்பட்ட பிரிட்டிஸ் இராணுவத்தினரையும் சுரங்கப்பாதை. பாலங்கள். தோண்ட. மண் அள்ள எனப் பலவேலைகளுக்கு தமிழகத்தில் இருந்து பிரிட்டிஸ் காரர்களால் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் பர்மா. மலேசியா சப்பான் வசம் வந்ததால் நிர்க்கதியாக நின்றனர், இவர்களைப் பல வழிகளில் மிரட்டியும் ஏமாற்றியும் சப்பான் ராணுவம் கொண்டு சென்ற வேலை வாங்கியது, பாதை முடிந்தது, போரும் முடிந்தது, சப்பான் தோல்வியுற்றது, இறுதியில் சப்பானிடம் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம் என்பது அண்மைக்கால மதிப்பீடு, இதில் 10000 ஆங்கிலேயர்கள், 1,50,000 இலட்சம் தமிழர்கள், எஞ்சியவர்கள் சீனர்கள். சயாமியர்கள், பர்மியர்கள், ஆனால் இதெல்லாம்  நேதாஜிக்குத் தெரிந்தே நடந்திருந்தன, இருப்பினும் வாய்மூடி மெளனம் காத்து விட்டார், இது பற்றிய  4 நூல்கள்  தமிழில் வெளிவந்துள்ளன, சயாம் பர்மா மரண இரயில்பாதை என்ற பெயரில், தேவை எனில் எனது 9788459063 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளவும்,

நேதாஜியா. படேலா. காந்தியா என்பதைப் பற்றித் தமிழர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம், நம்மைப் பொறுத்தவரை எல்லாரும் ஒன்றுதான்,

Leave a Response