படம் ஹிட்டாகிறதோ இல்லையோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் பாடல்கள் எப்படியோ ரசிகர்களின் மனதில் உள்ளே நுழைந்து விடுகின்றன. அந்தவகையில் அதிர்ஷ்ட காற்று இப்போது சந்தோஷ் நாராயணன் பக்கம் மிக சீரான வேகத்தில் வீசுகிறது.. பின்னே ரஜினி, விஜய் படங்கள் என திடீரென அவர் திசை மாறுவார் என சில மாதங்களுக்கு முன்பு யாராவது எதிர்பார்த்திருப்போமா என்ன..?
இப்போ லேட்டஸ்ட் விஷயம் என்னவென்றால் தீபாவளிக்கு ரிலீசாகும் கார்த்தியின் ‘காஷ்மோரா’ மற்றும் தனுஷின் ‘கொடி’ இரண்டுக்குமே சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்துள்ளார்.. தனுஷ் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிப்பதால் தனது பட விளம்பரங்களில் ‘ரெட்டை தீபாவளி’ என அடையாளப்படுத்தி வருகிறார்.. ஆனால் உண்மையான ரெட்டை தீபாவளி யாருக்கென்றால் அது சந்தோஷ் நாராயணனுக்குத்தான்…