தானா சேர்ந்த கூட்டத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் இப்போ ஓர் இடம்..!


கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிப்பதற்கான அறிகுறி அவர் எப்போது விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானாரோ அப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது.. இருந்தாலும் அந்த விஷயம் உறுதியாக நிலைபெற அடுத்த கட்ட நிகழ்வுகள் அவசியமல்லவா..? அதுவும் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்துள்ளது கீர்த்திக்கு..

சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் கேர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த ‘ரெமோ’ படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. அத்துடன் ராசியான ஜோடி என்கிற பெயரையும் தட்டிச்சென்றுள்ளது.. இந்த சந்தோஷத்தில் இருக்கும் கீர்த்திக்கு இன்னொரு ஜாக்பாட்டாக சூர்யாவின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.

ஆம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூடம்’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.. அதிலும் நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் அவருக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசாக இதை அளித்துள்ளது படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோகிரீன் நிறுவனம்.

Leave a Response