
அக்டோபர் 7ம் தேதி தனது இயல்பான நடிப்பால் வெற்றிகளைக் குவித்து வரும் விஜய் சேதுபதியின் “றெக்க’, குழந்தைகள், தாய்மார்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயனின் ‘ரெமோ மற்றும் இந்தியில் ஆடிவிட்டு தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் கண்ட பிரபுதேவாவின் ‘தேவி’ என மூன்று படங்கள் வெளியாகின..
இதில் ‘ரெமோ’ படத்தின் முதல் நாள் வசூல் ‘கபாலி’, ‘தெறி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்த இடம் பெற்றிருக்கிறதாம். முதல் நாள் வசூல் மட்டும் சுமார் 7 கோடியில் இருந்து 8 கோடிக்குள் இருக்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள். இதனை தயாரிப்பு தரப்பும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.. மேலும், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூலை கண்டிப்பாக ‘ரெமோ’ முறியடிப்பது உறுதி என்றும் சொல்கிறார்கள்.


