‘மாவீரன் கிட்டு’வும் புரட்சியும் பற்றி பேசிய பா.ரஞ்சித்..!


சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் கிட்டு திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று லயோலா கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நாயகன் விஷ்ணு விஷால், நாயகி ஸ்ரீதிவ்யா, படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருக்கும் பார்த்திபன், தயாரிப்பாளர் சந்திர சாமி, நடிகர் ஹரிஷ் உத்தமன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இயக்குநர் சமுத்திரகனி, பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது, “இப்படத்தின் டீசரை பார்க்கும் போது சமூகத்துக்கு தேவையான முக்கியமான ஒரு படைப்பை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் என்பது தெரிகிறது. இல்லாதவர்கள் ஒரு விஷயத்துக்காக போராடும் போது தான் அது புரட்சியாக மாறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது நாயகன் ஏதோ ஒரு முக்கிய சமூக பிரச்சனைக்காக போராடுவது போல் தோன்றுகிறது” என்று பாராட்டியுள்ளார்..

அதற்கேற்றவாறு விழாவில் பேசிய சுசீந்திரனும் “அழகர் சாமியின் குதிரை திரைப்படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது அதே போல் ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்துக்கும் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Leave a Response