ரஜினி பஞ்ச் டயலாக் சூர்யா பட டைட்டிலானது..!


பொதுவாக விஜய், அஜித் உட்பட முன்னணி நடிகர்கள் எப்படியாவது ரஜினி பட டைட்டிலை கைப்பற்றிவிட முயற்சி செய்வார்கள்..ஆனால் எல்லோருக்கும் அவரது டைட்டில் கிடைத்துவிடுவதில்லை.. அப்படி கிடைக்காதவர்களின் அடுத்த டார்கெட் ரஜினி பேசிய பஞ்ச் டயலாக்குகளில் இருந்து டைட்டிலை உருவாக்குவதுதான்..

இதற்கு முன் ‘நான் ஒரு தடவை சொன்னா’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ உட்பட பல பஞ்ச டயலாக்குகள் படங்களாக மாறியிருக்கின்றன. அந்தவகையில் இப்போது சூர்யாவும் தனது புதிய படத்துக்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ என டைட்டில் வைத்துள்ளார்.. இது பாட்ஷா படத்தில் ரஜினி பேசிய புகழ்பெற்ற வசனம் ஆகும்..

இந்தப்படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் இதற்கு முன் தனது படத்திற்கு வடிவேலு பேசி புகழ்பெற்ற ‘நானும் ரவுடி தான்’ என்கிற வசனத்தை டைட்டிலாக வைத்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response