ஐஸ்வர்யா தனுஷுக்கு ஐ.நா.சபை நல்லெண்ண தூதர் பதவி..!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா கலைத்துறையில் பல தளங்களில் இயங்கி வருபவர். பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர் என்பதோடு 3, வை ராஜா வை படங்கள் மூலம் திரைப்பட இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர். சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர்.

தற்போது ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வரும் ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு கூடுதல் கவுரவம் கிடைத்துள்ளது. அவரை ஐக்கிய நாடுகள் சபை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. இது ஒரு சர்வதேச அங்கீகாரமாகும்.

தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது. அவர்களின் உரிமைக்காக ஐ.நா சபையில் குரல் கொடுப்பது. என பல பணிகள் ஐஸ்வர்யாவுக்கு காத்திருக்கிறது. இளம் வயது இந்திய பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Leave a Response