நானூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது தர்மதுரை

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தர்மதுரை’ ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தென்மேற்குப் பருவக்காற்று வெற்றிப்படக் கூட்டணியின் அடுத்த படம் என்பது மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆண்டிப்பட்டி பாடலும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற வகையில் இப்படத்தைத் தமிழகமெங்கும் நானூறுக்கும் மேற்பட்ட திரையயரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

நல்ல படமாக இருந்தாலும் அதைச் சரியான வகையில் விளம்பரப்படுத்துவதோடு சிறந்த திரையரங்குகளில் படத்தை வெளியிட்டால்தான் மக்களிடம் சென்று சேரும். இதை உணர்ந்த தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் அதற்காகத் திட்டமிட்டு உழைக்கிறார் என்று சொல்கிறார்கள்.

ரஜினி படப் பெயரை மட்டுமல்ல அந்தப் படம் போல இதுவும் பெரிய வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அனுபவமிக்க விநியோகஸ்தர்கள் சொல்கிறார்கள்.

Leave a Response