மானுட இனம் சந்திக்கவே கூடாத இன ஒடுக்குமுறைகளுடன் விளம்பர விளையாட்டா? – ஜெயமோகனுக்குக் கேள்வி

ஜெயமோகனின் நேர்காணல் தொடர்பாக நடைபெற்றுவரும் விவாதங்களில், கவிஞர் தீபச்செல்வனின் கருத்து. அவர்,

இங்கு விவாதப் பொருள் ஜெயமோகனின் இனப்படுகொலை பற்றிய தவறான கூற்றே. ஜெயமோகன் ஈழம் சார்ந்த பல விடயங்களை இப்படி தவறாகச் சித்திரித்து விளம்பரம் தேடிக்கொள்பவர் என்பதனாலேயே இது பற்றி அதிகம் உரையாட விரும்பவில்லை.

முன்பொரு தடவை ஈழத்தில் இந்திய இராணுவம் பெண்களை வன்புணர்வு செய்யவில்லை என்றும் புலிகள் இட்டுக்கட்டிய கதையே இது என்றும் சொல்லி பின்னர் மன்னிப்புக் கேட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். ஒரு இனம் சந்தித்த – மானுட இனம் சந்திக்கக் கூடாத இன ஒடுக்குமுறைகளுடன் இப்படி விளம்பர விளையாட்டு புரிவது என்ன அறம்?

இலங்கை அரசு நடத்தியது ஒரு இனப்படுகொலை என்பதற்கான போதுமான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. உலகில் நடந்த இனப்படுகொலைகளை குறித்தெல்லாம் அறிந்துகொள்வது மானுட இனம்மீதான அக்கறையினாலேயே. உங்கள் நாட்டின் அருகே, உங்கள் மொழிபேசும் தமிழினமாகிய நாங்கள் அறுபது வருடங்களாக ஒடுக்குமுறையை சந்திக்கிறோம், 30 ஆண்டுகளுக்கு மேலாக இனப்படுகொலைகளை சந்திக்கிறோம்.

அப்படியிருக்க இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்று ஜெயமோகன் கூறுவது ஈழத் தமிழர்கள் சந்தித்த இனப்படுகொலைய தவறாகப் பயன்படுத்தி கவனம் கோரும் இழிவரசியலே. நடந்த இனப்படுகொலைகளைக் காட்டிலும் இத்தகைய அரசியல்கள் இழிவானதும் குரூரமானதுமாகும்.

என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Response