ரஜினி தமிழர்களிடமிருந்து பணத்தை மட்டுமே விரும்புகிறார்-ஒரு கவிஞரின் சீற்றம்

டிசம்பர் 12 அன்று ரஜினி நடித்த லிங்கா படம் வெளிவரவிருக்கிறது. அந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக ரஜினியும் அவரது விசுவாசிகளும் நாள்தோறும் ஏதாவதொரு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவற்றைக் காண்ப் பொறுக்காது தமிழின் புகழ் பெற்ற கவிஞர் லிங்கா படத்தைப் பார்க்கமாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதம்….

லிங்கா திரைப்படத்தை நான் பார்க்கப்போவதில்லை. அந்தப் படத்தைப் பற்றியச் செய்திகளை படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ கூட நான் விரும்பவில்லை. ரஜினி என்ற பிம்பம் தமிழக இளைஞர்களின் குருதியில் நிக்கோடினை ஏற்றி அவர்களை மரணத்தின் படுகுழியில் தள்ளியது. அரசியல் பிம்பமோ ரஜினிக்கு பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்தது. அவர் தமிழர்களிடமிருக்கும் ‘பணத்தை’ மட்டுமே விரும்புகிறார். பாபா படத்தில் அவரும், அவரின் குடும்பத்தாரும் அடித்த லூட்டியையும், ரசிகர்களிடமிருந்து அவர்கள் பிடுங்கிய பணத்தையும் இந்த உலகம் கண்டது. ஒரு செடி கூட தன்னை வளர்த்தவருக்கு உபயோகப்படுகிறது. ஆனால் ரஜினி என்கிற பிம்பம் பெரும் பணம் உறிஞ்சு குழலாகி விட்டது.

தமிழகத்தில் சினிமா மாயை அகன்று உண்மையான ஒரு தமிழன் அரசியலில் அடியெடுத்து வைத்து ஆட்சிக்கு வர வேண்டும். அந்தக் காலம் வெகு விரைவில் மலர்ந்தே தீரும்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஊழல்வாதிகள் என்று இந்தியாவே தெரிந்து கொண்டது. இனி தமிழர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சினிமாவா தமிழனா என்று.

= விக்கிரமாதித்தியன், சென்னை.

 

Leave a Response