ஈழ அறவழிப்போராட்டம் பற்றி போதிய அறிவில்லாமல் ஜெயமோகன் பேசுகிறார் – வ.ஐ.ச.ஜெயபாலன் எதிர்வினை

ஜெயமோகன், இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலை குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிராக கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் எதிர்வினையில்….

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள் – வ.ஐ.ச.ஜெயபாலன்

இலங்கை அரகோள் – வ.ஐ.ச.ஜெயபாலன்சை ஆதரிப்பதோ அல்லது புலிகளை எதிர்ப்பதோ ஜெயமோகனின் விருப்பம். அதுபற்றி நான் எப்போதும் அலட்டிக் கொள்ளவதில்லை. ஆனால் எதிர்காலத்திலாவது ஜெயமோகன் சிங்களபாசிஸ்டுகளின் நிலைப்பாட்டை வழி மொழியமுன்னம் குறைந்த பட்சம் சிங்கள ஜனநாயக சக்திகளின் கருத்துக்களையாவது வாசிக்கவேண்டும். இது என் கோரிக்கை.

அரசையும் புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக விமர்சித்த பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும்பாலான சர்வதேச நாடுகளும் குறிப்பாக இலங்கை அரசின்மீது இனக்கொலை குற்றச்சாட்டையோ அல்லது மனுக்குலத்துக்கு எதிரான தாக்குதல் குற்றச்சாட்டையோ அல்லது போர்க்குற்றச்சாட்டையோ சுமத்தியுள்ளன.

இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதும் தமிழ்ப் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்குதல்களை குறைந்த பட்சம் மனுக்குலத்துக்கு எதிரான தாக்குதல்கள் எனவோ அல்லது போர்க்குற்ற நடவடிக்கையெனவோ சர்வதேசம் குற்றம் சாட்டி விசாரணையையும் கோரி நிற்கிறது. இவற்றைக்கூட ஜெயமோகன் கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தம் தருகிரது.
2
2009 முற் பாதியில் தீவிரமடைந்த 4 லாவது ஈழ யுத்தத்தின்போது இலங்கை அரசின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தால் லட்சக் கணக்கில் மக்கள் கொல்லப் பட்டதையும் மேலும் இலங்கை ராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் மற்றும் கைது செய்யப்பட்ட தமிழ்ப் பெண்போராளிகள் வகை தொகை இல்லாமல் பாலியல் வன்புண்ர்வுக்கு உள்ளாக்கப் பட்டதையும் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித சஉரிமை அமைப்புகளும் ஆதாரபூர்வமாக உறுதிப் படுத்தியுள்ளன. இவற்றின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான அமைப்பு இலங்கை இராணுவத்தின்மீது போர்க்குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளது.

சிங்கள பாசிஸ்ட்டுகளும் சிங்கள இனவாதிகளும் தவிர்ந்த சிங்கள ஜனநாயக சக்திகள் குறிப்பாக திரு.பாசன அபயவர்த்தன (Bashana Abewardana) போன்ற மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் சிங்கள சிவில் சமூகத்தினர் இலங்கையில் இருந்து இடம்பெற்ற இனக்கொலைக்கான ஆதாரங்களைக் கடத்திவந்து சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு வைத்தார்கள். சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை யுத்தக் குற்றச்சாட்டு பற்றிய பதிவில் இடம்பெற்ற ஆதாரங்களில் பல சிங்கள இனவாதத்தை எதிர்க்கும் சிங்கள ஊடகவியலாளர்களால் கடத்திவரப் பட்டவையாகும்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இலங்கை தமிழர் இன படுகொலை தொடர்பாக இலங்கை இராணுவத்துக்கு எதிராக சிங்கள ஜனநாயக சக்திகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்களைக்கூட கண்டுகொள்ளாமல் சிங்கள பாசிச சிங்கள இன வாத சக்திகளின் கருத்துக்களை முன்னிலைப் படுத்துவது அதிற்ச்சியும் கவலையும் தருகிறது.

சிங்கள இனவாத அரசின் மறைமுக அனுசரணையோடு இரணுவம் தமிழ் மக்கள்மீதும் தமிழ் பெண்கள் மீதும் நடத்திய இனக்கொலை தாக்குதல்களை குறைந்த பட்சம் மனுக்குலத்துக்கு எதிரான தாக்குதல்கள் எனவோ அல்லது போர்க்குற்ற நடவடிக்கையெனவோ சர்வதேச சமூகம் குற்றம் சாட்டி விசாரணையையும் கோரி நிற்கிறது. இனியேனும் இவற்றையெல்லாம் எழுத்தாளர் ஜெயமோகன் கருத்தில் கொள்ளவேண்டும்.

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எனது 2வது விண்ணப்பம்
வ.ஐ.ச.ஜெயபாலன்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பின்வரும் தர்க்கங்களை முன் வைக்கிறார். இது இலங்கை அரசுக்கு சார்பு நிலையா இலங்கை அரசின் மீதான விமர்சனமா அல்லது இலங்கை அரசுக்கு எதிர் நிலையா என்கிற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

இனி எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வதை வாசியுங்கள்.
“முதலில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை. எந்த ஓர் அரசும் தனக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.,,,,,,,,,,,,,,
ஆயிரக்கணக்கான இளைஞர்களைக் கொன்றுதானே இந்தியாவில் நக்சலைட் போராட்டத்தை ஒழித்தார்கள். அதை எந்த இனப்படுகொலை என்று சொல்வது? ……………..
இதேமாதிரியான செயல்பாட்டைத்தான் இலங்கை அரசும் மேற்கொண்டது. எனவே, அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது……………………….
இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. ………ஜே.வி.பி-க்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, …………………………..
அரசு தனக்கு எதிரான போரை, போராகத்தான் பார்க்கும். புலிகள் பெரும் போரைத் தொடங்கினார்கள், அவர்கள் போரை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். காந்தி ஏன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரைத் தொடங்கவில்லை? ஆயுதம் ஏந்தினால் என்ன நடக்குமென்று அவருக்குத் தெரியும். பிரிட்டிஷ் ராணுவத்தின் வாளை அதன் உறையிலிருந்து உருவவிடக் கூடாது என்பதில் காந்தி தெளிவாக இருந்தார். …………………………
செல்வநாயகம் போன்றவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் என்பது குறைந்தகாலம்தான். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,”
2
இலங்கை அரச இராணுவம் நடத்திய இனக்கொலையையும் இலங்கையில் ஜேவிபியினர் கொல்லப்பட்டதையும் ஒப்பிட்டு 2009ல் இடம்பெற்றது இனக்கொலையல்ல எனவும் இலங்கை அரசின் செயல்பாடு சிங்கள இனவாதமல்லவெனவும் நிறுவ எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் முனைகிறார். நக்சலைட் எதிர் நடவடிகைகளையும் இலங்கை இனக்கொலைகளையும் சமப்படுத்த முனைகிறார். அப்படியாயின் ஜெயமோகன் பின்வரும் கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.

இலங்கை இனகொலை போரின் பின்னணியில் சிங்கள அரச இராணுவத்தால் அமைப்பு ரீதியாக தமிழரின் வழிபாட்டுத் தலங்கள் – இந்துக் கோவில்கள் கிறிஸ்துவ தேவாலயங்கள் – தாகப்பட்டுள்ளன. பிராமண பூசகர்களும் கிறிஸ்துவ குருவானவர்களும் கொல்லபட்டுள்ளனர். ஆனால் ஜெவிபி அழிக்கபட்டபோது இனரீதியான காரணத்துக்காக பல்லாயிரம் சிங்கள பொதுமக்கள் கொல்லப் படவோ இனரீதியாக பலநூறு சிங்களபெண்கள்மீது பாலியல் வன்புணர்வுத் தாக்குதல் நிகழ்த்தப்படவோ இல்லை. ஆனால் இலங்கை இனப்படுகொலையில் போராளிகள் மட்டும் கொல்லப் படவில்லை. இனரீதியாக இந்து கிறிஸ்துவ தேவாலயங்கள் தாக்கப் பட்டுள்ளன தமிழர்கள் என்பதற்காகவே பிராமண மற்றும் கிறிஸ்துவ குருக்கள் படுகொலை செய்யபட்டுள்ளனர் .

இத்தகைய பின்னணியில் ஜெவிபி அமைப்புக்கு எதிரான இலங்கை அரசின் தாக்குதல்களையும் நக்சலைட்டுக்கு எதிரான இந்திய அரசின் தக்குதல்களையும் புலிகளை மட்டும் தாக்குவதற்க்குப் பதிலாக இலங்கை அரச படைகள் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களையும் ஒரே மாதிரியான தாக்குதல்கள் என சிங்கள இனவாதமற்ற அரச படைகளின் தாக்குதல்கல் என ஜெயமோகன் எப்படி சமப்படுத்தி நியாயப் படுத்துகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்க்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதில் தரவேண்டும்.

தமிழர்கள் என்பதற்காக போராளிகள் அல்லாத பல்லாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் தமிழ்ப் பெண்கள் என்பதற்க்காக பலநூறு பெண்கள்மீது பாலியல் வன்புணர்வுத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது. சிங்கள ஜனநாயக சக்திகளே நியாயப் படுத்தாத மனுக்குலத்துக்கு எதிரான பாதகத்தை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களோ இது சிங்கள இன்வாதமல்ல என்கிறார். இவ்விடயத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் நிலைபாடு சிங்கள அரசு ஆதரவு நிலைப்பாடு எனவே தோன்றுகிறது. உண்மையில் இது கொடிய சிங்கள பாசிஸ்ட்டுகளின் நிலைப்பாடாகும்.
2
ஜெயமோகன் தவறாக விவாதிப்பது போல சர்வதேச சமூகம் முன்வைக்கும் இனக்கொலை பற்றிய விவாதம் . புலிகள் கொல்லபட்டது பற்றியதல்ல. அது இலங்கை அரசின் அனுமதியோடு இலங்கை இராணுவம் அமைப்பு ரீதியாக பல்லாயிரம் தமிழ்ப் பொதுமக்களை கொன்றமை தொடர்பானது, மேலும் அமைப்புரீதியாக இலங்கை இராணுவத்தால் வகை தொகையின்றி தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கபட்டது தொடர்பானது. இவற்றுடன் இலங்கை சிங்கள இராணுவம் இழைத்த அமைப்பு ரீதியான போர்க் குற்ற்ங்கள்
சம்பந்தப் பட்டது. மேற்படி மனுக்குலத்திற்க்கு எதிராக இனரீதியில் சிங்கள அரசினால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் எதிர்வினையே இலங்கை அரசுகெதிரான இனப்படுகொலைசார் குற்றச்சாட்டுகளாகும்.

இந்தப் பின்னணியை புரிந்து கொள்ளாது சிங்கள அரசின் போரை இனவாத மற்ற போர் என எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வாதிடுகிறார. இது எத்தகைய நிலைப்பாடு?

இங்கு ஜெயமோகன் வைக்கும் தர்க்கத்தினை சரியானது என எடுத்துக்கொண்டால் அதன் அடிப்படையில் ஜாலியன் வாலா படுகொலைகளில் இருந்து கிட்லரின் இனகொலைகள் வரைக்கும் பல்வேறு போர்க் குற்றங்களும் இனக்கொலைகளும் நியாயமான அரச வன்முறைகளாக நியாயப் படுத்தபடலாம்.

இதனால்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களிடம் உங்கள் நிலைப்பாடும் சிங்கள பாசிஸ்ட்டுகளின் நிலைப்பாடும் ஒன்றாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினேன். இதனால்தான் எழுத்தாளர் ஜெயமோகனிடம் சிங்கள ஜனநாயக வாதிகளின் நிலைபாட்டையாவது புரிந்துகொண்டு பேசுங்கள் என பணிவன்புடன் கேட்டுக் கொண்ட்டேன்.
3
தந்தை செல்வநாயகம் தலைமையில் நிகழ்ந்த அறவழிப் போராட்டம் பற்றிய போதிய அறிவில்லாமல் எழுத்தாளர் ஜெயமோகன் பின்வரும் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்.

மகாத்மா காந்தி அவர்கள் ஆரம்பித்த அறவழிப் போராடம் (1919- 1947) ஏறக்குறைய 29 வருடங்களும் காந்திய வாதியான தந்தை செல்வா ஆரம்பித்த அறவழிப்போராட்டமும் (1950 – 1981 ) ஏறக்குறைய 30 வருடங்களும் தொடர்நதன. 1951ல் தமிழரசுகட்சியின் முதலாவது மாநாடு இனைபாட்ச்சிக்காக அறவழியில் போராடும் தமது முடிவை உறுதி செய்த்து. 1981ல் யாழ் நூலகம் மற்றும் தமிழரசுக் கட்ச்சி அலுவலகம் தலைவர் யோகேஸ்வரனின் வீடு என்பவற்றின் எரிப்போடு அறவழிப் போராட்டம் முடிவுக்கு வருகிரது. தந்தை செல்வா ஆரம்பித்த தமிழரசுக் கட்சி உயிர் கொலை அச்சுறுத்தல் பின்னணியில் அறப்போராட்ட செயல்பாடுகளை கைவிட நேர்ந்தது.

இந்த பின்னணிகள் தெரியாமல் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் “மேலும், ‘இலங்கையில் அறவழிப் போராட்டங்கள் நடந்து, அதற்குப் பிறகும் அடக்குமுறை தொடர்ந்ததால்தான் ஆயுதப் போராட்டம் வந்தது’ என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. செல்வநாயகம் போன்றவர்களால் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் என்பது குறைந்தகாலம்தான்” என வாய்கூசாமல் பொய் பேசுகிறார்.

மகாதமா காந்தி ஆரம்பித்த அறவழிப் போராட்ட காலத்துக்கு இணையாக இலங்கைத் தமிழ் காந்திய வாதிகளின் தலைமையில் நடந்த இலங்கைத் தமிழர்களின் அறவழிப் போராட்டங்களை எழுத்தாளர் ஜெயமோகன் கொச்சைப் படுத்துவதை என்னால் நம்ப முடியவில்லை.

தமிழரின் அறவழிப் போராட்ட்த்தை ஒடுக்க அரசு ஒட்டுமொத்த தமிழ் மக்கள்மீது இனக் கலவரங்களை ஏவி விட்டார்கள். 1956, 1958, 1977, 1981 (யாழ் நூலக எரிப்பு) 1983 இனக் கலவரவரங்கள் என அரசும் அரசபடைகளும் சம்பந்தபட்ட இனக் கலவரங்கள் இடம் பெற்றன. அறப் போராட்ட்த்தை ஒடுக்க முடியாத அரசு இனக்கலவர கொலைகள்மூலம் மக்களை மிரட்டிப் பணிய வைக்க முயன்றார்கள். 1981 யாழ் நூலக எரிப்புடன் தொடர்ந்த தமிழனப் படுகொலைகளுக்குப் பின்னர் தமிழரசுக் கட்ச்சியின் அறவழிப் போராட்ட அமைப்புகள் செயலிழந்துபோயின. அதன்பின்னர் சிங்கள படுகொலை அரசுடன் ஆயுதப் போராட்டம் மட்டுமே எஞ்சியது. ஆயுதப் போராட்டம் மட்டுமே சாத்தியமானது.

இலங்கை தமிழர்கள் போராட்டம் என்பதால் இலங்கையில் நிகழ்ந்த காந்திய வாதிகளின் போராட்டங்களை கொச்சைப் படுத்தும் போக்கு ஆரோக்கியமானதல்ல என்பதை எழுத்தாளர் ஜெயமோகம் உணரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் தன் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

Leave a Response