படி படி என்றார் காமராசர். குடி குடி என்கிறார் பன்னீர்செல்வம்

திருச்செங்கோட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியரைக் கண்டறிந்து,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாணவர்கள் எதிர்காலத்திற்குதமிழகஅரசே பொறுப்பேற்க வேண்டும்.கொங்குநாடு ஜனநாயககட்சி 

நிறுவனத்தலைவர்ஜி.கே.நாகராஜ் அறிக்கை

பள்ளி மாணவர்களுக்கு மது விற்கும் ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வருக்கு 23.08.2014-ம் தேதியில் கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக கடிதம் எழுதியிருந்தேன்.

 அதேபோல பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் மதுக்கடைகளில் மதுவாங்குவதை புகைப்பட ஆதாரத்துடன் அனுப்பிய செய்தியை பத்திரிக்கைகள் வெளியிட்டிருந்தன.அதேபோல பொது இடங்களில் புகை பிடிப்பது,மது அருந்துவது உள்ளிட்ட சட்டத்தை தனிப்படை அமைத்து கண்காணிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக வைக்கப்பட்டது.

கர்மவீரர் காமராஜர் “படி படி” என்றார்.பள்ளிக்கூடமில்லாத ஊர் இருக்கக்கூடாது என்றார்.நீராதாரங்களை மேம்படுத்தினார்.ஆனால் இன்றைய தமிழக அரசு ஒரு ஊருக்கு நான்கு மதுக்கடைகளைத் திறந்து “குடி குடி”என்று குடிக்கத் தூண்டுகிறது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளை விட,அரசுப் பள்ளிக்கூடங்களை விட, நூலகங்களை விட, டாஸ்மாக் கடைகளே அதிகம் உள்ளன.

திருச்செங்கோடு அரசுப்பள்ளியில் ஆறு பிளஸ்2 மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதாகவும்,மது போதையில் இருந்ததாகவும்,அவர்களை பள்ளியைவிட்டு நீக்கி, மாற்றுச்சான்றிதழ் கொடுத்துவிட்டதாகவும்  பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.எவ்விதக்கட்டுப்பாடும் இல்லாமல்    மதுக்கடைகளைத்       திறந்துவிட்டு, மாணவர்கள் பள்ளியில் மது அருந்தக்காரணம் தமிழக    அரசின்  மதுத்தொழிலே ஆகும்.

மாணவர்களுக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே மாணவர்களின் செயல்பாட்டிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.மாணவர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியை தமிழக அரசு ஏற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Response