ஆகஸ்ட்-12ல் வெளிவர தயார் நிலையில் இருக்கும் ‘வாகா’..!


விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் ‘வாகா’.. காஷ்மீர் ராணுவ பின்னணியில் படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் கதையை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஹரிதாஸ் என்கிற சமூக நோக்கிலான படத்தை இயக்கி பாராட்டு பெற்ற அதே குமரவேலன் தான்..

இந்தப்படத்தில் கதாநாயகியாக ரன்யா நடிக்க, இசையமைத்துள்ளார் டி.இமான். குமரவேலனின் முந்தைய மூன்று படங்களிலும் விஜய் ஆண்டனி தான் இசையமைத்தார். அவர்தான் இப்போது பிசியான ஹீரோவாகிவிட்டாரே.. அதனால் இமானை தன்னுடன் கூட்டணி சேர்த்துக்கொண்டாராம் இயக்குனர் குமாரவேலன். அதுமட்டுமல்ல, விக்ரம் பிரபுவுக்கும், இமான் ராசியான கையாச்சே..அந்த சென்டிமென்ட்டும் இணைந்துகொண்டது.

ராணுவ வீரனின் காதல் கதை. ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் ‘வாகா’ படத்தில் துணை ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. ராணுவ வீரரான விக்ரம் பிரபு தாடி வைத்துள்ளாரே..? ராணுவ வீரர் தாடி வைத்திருக்கலாமா என்கிற சந்தேகம் பலருக்கும் ஏற்படவே செய்யும்.

இதில் விக்ரம் பிரபு எல்லைப்பாதுகாப்பு படைவீரராக நடிக்கிறார். ராணுவ வீரர்கள்தான் தாடி வைத்துக்கொள்ள கூடாது.. ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர்களது பணியின் சூழல் காரணமாக தாடி வைத்துக்கொள்ளலாம் என்கிற சலுகை உள்ளது

எல்லையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி எளிதாக கிடைத்துவிடவில்லை.. பல போராட்டங்களுக்கு பிறகு தான் அதை சாத்தியமாக்கினோம். கடுங்குளிர், கடும் வெயில் என எல்லாவித வெப்பநிலையிலும் வேலை பார்த்தார்களாம் படக்குழுவினர்.

படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்கு எப்போதும் ராணுவ வீரர்கள் சுற்றி நின்றபடி இருந்தார்கள். அதனால் படப்பிடிப்பு நடத்துவதில் பெரிய அளவு சிரமங்கள் குறைந்தனவாம். இந்தப்படத்தின் கதைக்காக தேவைப்பட்ட சில விபரங்களை வீரப்பன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டும், ஒருகாலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்தவருமான ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார் தான் கொடுத்து ஸ்கிரிப்ட்டில் உதவி செய்தாராம். ஆகஸ்ட்-12ல் இந்தப்படம் வெளியாகிறது.

Leave a Response