காவ்யா மாதவன் பெயரை தவறாக பயன்படுத்தியவர் கைது.!

ஆன்லைன் குற்றங்களை பொறுத்தவரை பிரபல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் இரண்டுவிதமான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ஒன்று நடிகைகளின் மார்பிங் செய்யப்பட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவர்களை மனரீதியாக துன்புறுத்துவது.. இன்னொன்று சம்பந்தப்பட்ட நடிகைகளின் பெயரில் யாராவது போலியான ட்விட்டர், பேஸ்புக் கணக்கு துவங்கி அவர்களது புகைப்படங்கள் அவர்களது செய்திகளை பற்றி பகிர்ந்து வருவது..

இதில் இரண்டாவதாக சொன்னது தவறுதான் என்றாலும், எல்லை மீறாமல் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சொன்னதுபோன்று மற்றவர்கள் விஷயத்தில் சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவது, இல்லாத பொல்லாத கதைகளை கட்டிவிடுவது என சில விஷமிகள் இதற்காக புல் டைம் வேலை பார்க்கிறார்கள்..

மலையாள நடிகை காவ்யா மாதவன் பெயரில் 13 போலியான பேஸ்புக் கணக்குகளை வைத்து இப்படி மோசடி செய்துவந்த நபர் நேற்று எர்ணாகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனது பெயரில் நிறைய போலியான பேஸ்புக் கணக்குகள் இருப்பதை அறிந்த காவ்யா, போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

கைதான நபர், காவ்யா மாதவன் தவிர இன்னும் 25 நபர்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு நடத்திவருவதும் அம்பலமாகியுள்ளது.

 

 

Leave a Response