சிங்கள இராணுவத்தின் கொடிய கொடுமைகளை வெளிப்படுத்தும் நேரடி சாட்சி

உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்க ளுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூறுவதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பில் மன்னார், ஒட்டுசுட்டான், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் ஜுலை 30 சனிக்கிழமை நடைபெற்றன.

ஒட்டுசுட்டானில் நடந்த நிகழ்வில் முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன.

அவர் கூறியதாவது….

புனர்வாழ்வு என்ற போர்வையில் நாங்கள் இரண்டு முதல் நான்கு வருடங்கள் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்பே விடுதலை செய்யப்பட்டுள்ளோம்.

தண்டனையுடன் கூடிய பொதுமன்னிப்பே எங்களுக்கு வழங்கப்பட்டது. இப்போது நாங்கள் மீண்டும் யுத்தத்தைப்பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. சமூகத்தில் இணைந்து சாதாரண மக்களுடன் அமைதியாக வாழவே விரும்புகிறோம். எனவே, இதுபோன்று போர்க் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

தடுப்பில் இருக்கும் போது எமக்கு இராசாயன உணவு தந்தார்கள். ஊசி போட்டார்கள். ஊசி போட்ட உடன் ஒரு போராளி உயிரிழந்தார். தடுப்பில் வைத்து எமக்கு ஏதோ செய்துள்ளார்கள்.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் வெள்ளைக்கொடியுடன் போனதற்கான ஆதாரம் நிறைய இணையங்களில் வெளிவந்துள்ளன. அத ற்கான பல சாட்சியங்களும் இருக்கின்றன. அவர்கள் பயத்தில் கதைக்கி ன்றா ர்கள் அல்ல. கதைக்கப் போனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

எங்களுக்கு இலங்கை அரசாங்கம் நீதியை பெற்று தரப் போவதில்லை.. தமிழ் அரசியல் கட்சிகள் கூட தற்போது “பல்டி ” அடிக்கின்றார்கள். எனவே கண்டிப்பாக சர்வதேசத்தில் இருந்து நடுநிலையான நாடுகள் தான் எங்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.

யுத்த தர்மம் என்ற ஒன்று இருக்கின்றது.இலங்கை இராணுவத்திற்கு யுத்த தர்மம் என்றால் என்ன என்பதனை போதிக்க வேண்டும். சரணடைந்தவங்களை சுடுவது நியாயம் அல்ல. ஏனெனில் அவர்கள் நிராயுத பாணியாகத் தான் சரணடைந்தவர்கள்.

நான் ஒரு முன்னாள் போராளி தடுப்பிலிருந்து வந்த பின்னர் யுத்த நினைப்பை விட்டு ஒதுங்கி இருக்கின்றோம்.

நாங்கள் தடுப்பில் இருக்கும் போது எமக்கு இரசாயன உணவை தந்து இருக்கின்றார்கள். நான் தடுப்புக்குப் போக முன்னர் நூறு கிலோ தூக்கிக் கொண்டு கிலோ மீற்றர் கணக்குக்கு ஓடுவேன். தடுப்பால் வந்த பிறகு ஒரு பொருளை தூக்க முடியவில்லை. அத்துடன் கண் பார்வையும் குறையுது. இதில் இருந்து எங்களுக்கு ஏதோ நடந்து இருக்கின்றது என்பது எமக்கு தெளிவாக தெரிகின்றது.

தடுப்பில நாங்கள் இருந்த போது எமக்கு எல்லாம் தடுப்பு மருந்து ஏற்றினவர்கள். ஏதோ ஒரு ஊசி போட்டார்கள் எது என்ன தடுப்புக்கான ஊசி என எமக்கு தெரியாது. அந்த தடுப்பு ஊசி போட்ட போராளி ஒருவர் ஊசி போட்ட அன்றைய தினம் இரவே உயிரிழந்தார்.

அத்துடன் தடுப்பில் இருந்து வெளியேறிய 12 ஆயிரம் போராளிகளுக்கும் மறுவாழ்வு அளிக்கப்பட்டாலே மீண்டும் போராட்டம் துளிர்க்காது.

போர்க்குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதை ஒப்புக்கொண்டு சர்வதேசத்திடமும் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். அத்துடன் அந்த விடயத்தைக் கைவிட்டு விட்டு சமாதான வாழ்க்கையை வாழ்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த கருத்தறியும் அமர்வுகளில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பலரும் பொதுமக்களின் காணிகளிலும், மக்கள் குடியிருப்புக்களிலும் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மக்கள் மத்தியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பது நல்லிணக்கத்திற்குப் பாதகமானது என அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

Leave a Response