காஷ்மீரில் நடக்கும் கொடூரம் , இராணுவத்தினரால் இளம்பெண்ணுக்கு பாலியல் கொடுமை

காஷ்மீர்
இந்தியாவின் இன்னொரு கோர முகம்

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் இங்கு சட்டத்தின்படியே ஆட்சி நடக்கிறது என்றும் கூறுகிறார்கள். சட்டத்தால் நிறுவப்பட்ட நீதிமன்றங்களைத் தவிர வேறு எவருக்கும் இன்னொருவரின் உயிரைப் பறிக்க உரிமை இல்லை என்று இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21 கூறுகிறது.

ஆனால் காஷ்மீரில் இருக்கும் 3 லட்சம் இந்திய இராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி ராணுவம்,
•சந்தேகப்படும் நபர் என எவரையும் கைது செய்யலாம்
•சந்தேகப்படும் நபர் என்று யாரையும் சுட்டுக்கொல்லலாம்
•எந்த நேரத்திலும் எவர் வீட்டிலும் புகுந்து சோதனை செய்யலாம்.
•எவர் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கலாம்.
•ராணுவத்தினர் மேற்கொள்ளும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

காஷ்மீரில் இந்தச் சட்டம் அமுல்படுத்திய பின்பு இதுவரை விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட 8000 இளைஞர்களைக் காணவில்லை.

அண்மையில் காஷ்மீரில் 38 மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து 2730 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார். இதற்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தபோது 5 அப்பாவி மக்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய கொடுமைகளுக்கு காரணமான ராணுவத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை நீக்கும்படி சர்வதேச மன்னிப்புசபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பன கோரி வருகின்றன.

தனது சொந்த மக்களையே கொல்லும் இந்திய அரசு இலங்;கையில் தமிழ் மக்களுக்கு உதவும் என இப்பவும் நம்மவர் சிலர் கூறி வருகிறார்கள்.

Leave a Response