சசிகலா வரட்டும் ஓபிஎஸ் வேண்டாம் – சி.வி.சண்முகம் கருத்தால் பரபரப்பு

விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
சி.வி சண்முகம் பாமஉ பேசுகையில்….

எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி உயர்வைக் கட்டுபடுத்த வேண்டும் என்று பலமுறை பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். தற்போது அனைத்துப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்தும் விலை குறைந்ததற்கு காரணம் அதிமுகதான்.

தமிழ்நாட்டில் இன்று அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் 11 ஆண்டுகாலம் ஆண்டு கொண்டிருப்பவர் பிரதமர் மோடி. உலகமே திரும்பி பார்க்கக்கூடிய தலைவர் மோடி. பாகிஸ்தானை அந்நாட்டிற்குள்ளேயே சென்று அடித்து நொறுக்கியவர்தான் மோடி. மோடியைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதிகிடையாது.

எப்ப பார்த்தாலும் டிவியில் அதிமுக, பாஜக கூட்டணி குறித்தே விவாதிக்கிறார்கள்.கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு எங்க நோவுது. பிரிந்து சென்றவர்களை இணையுங்கள் என்று கூறுகிறார்கள். நீ யாருடா எங்களை இணைக்கச் சொல்வதற்கு. கட்சியில் நீக்கப்பட்டவரை, அவர் செய்த துரோகத்திற்காக நீக்கப்பட்டவரை, அவருக்கு அடையாளம் கொடுத்து, பதவி கொடுத்து அழகு பார்த்த அந்த அதிமுகவை காலால் எட்டி உதைத்தவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினோம். அவர்களை சேர்க்கனும் சொல்வதற்கு நீ யாருடா?.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை மூத்த நிர்வாகிகள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், நந்தம் விஸ்வநாதன், அன்பழகன் ஆகியோருடன் நானும் சென்று எடப்பாடியைச் சந்தித்துச் சொன்னோம். ஆனால் அவர் ஏற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.

செங்கோட்டையனின் இந்தக் கருத்தை இதுவரை சி.வி.சண்முகம் மறுக்கவில்லை.

இப்போது அவர் இப்படிப் பேசியிருக்கிறார்.

ஏன்?

இப்போதும் அவர் பேச்சில் ஓபிஎஸ் எதிர்ப்பு மட்டும்தான் இருக்கிறது சசிகலா பற்றியோ டிடிவி.தினகரன் பற்றியோ பேசவில்லை.இதன் மூலம், ஓபிஎஸ் தவிர அனைவரும் ஒருங்கிணையலாம் என்கிற எடப்பாடியின் கருத்தைத்தான் சி.வி.சண்முகம் பிரதிபலித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response