உங்கள் குடும்பச் சண்டையால் நாங்கள் துன்பப்படவேண்டுமா? – அன்புமணிக்கு எதிர்ப்பு

பாமகவில் நடக்கும் தந்தை மகன் சண்டை ஊரறிந்தது.
இந்நிலையில்,ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி, தமிழ்நாடு நாளான நவம்பர் 1 ஆம் தேதி வரை மொத்தம் 100 நாள்கள் கால அளவில் பாமகவின் தலைவர் மருத்துவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது. சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, மது – போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகியவை அன்புமணி மேற்கொள்ளவுள்ள பயணத்தின் நோக்கங்கள் என்றும்,

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்தப்பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்கும்படி அன்புடன் பாமக கேட்டு கொள்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

அன்புமணியின் இந்த அறிவிப்புக்கு சமுதாய ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அப்பாவடன் சண்டை என்றால் அதை வீட்டுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும், அது முடியவில்லையெனில் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் பலத்தை உங்கள் அப்பாவுக்குக் காட்டுவதற்காக நாட்டின் அமைதியைக் குலைக்கும் வேலையில் ஈடுபடக்கூடாது.

நீங்கள் 100 நாள்கள் நிகழ்ச்சி நடத்தினால் அதனால் போக்குவரத்து நெரிசல் பாதுகாப்புச் சிக்கல் உட்பட நிறைய சிக்கல்கள் வரும். உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க காவல்துறை மெனக்கெட வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட குடும்பச் சண்டைக்காக நாட்டுமக்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமா?

இவ்வாறெல்லாம் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு இதற்கு தமிழ்நாடு அரசும் காவல்துறையும் அனுமதி அளிக்கக்கூடாது என்கிற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

– அன்பன்

Leave a Response