2025 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு பொது விடுமுறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை நாட்கள் விவரம்…
சனவரி 1 புதன்கிழமை – ஆங்கிலப் புத்தாண்டு
சனவரி 14 செவ்வாய் – தமிழர் திருநாள் பொங்கல்
சனவரி 15 புதன்கிழமை – திருவள்ளுவர் நாள்
சனவரி 16 வியாழன் – உழவர் திருநாள்
சனவரி 26 ஞாயிறு – குடியரசு நாள்
பிப்ரவரி 11 செவ்வாய் – தைப்பூசம்
மார்ச் 30 ஞாயிறு – தெலுங்கு வருடப் பிறப்பு
மார்ச் 31 திங்கள் – ரம்ஜான்
ஏப்ரல் 1 செவ்வாய் – வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு
ஏப்ரல் 10 வியாழன் – மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 14 திங்கள் – சித்திரைப் பிறப்பு
ஏப்ரல் 18 வெள்ளி -புனிதவெள்ளி
மே 1 வியாழக்கிழமை – மே நாள்
ஜூன் 7 சனிக்கிழமை – பக்ரீத்
ஜூலை 6 ஞாயிறு – மொகரம்
ஆகஸ்ட் 15 வெள்ளி – விடுதலை நாள்
ஆகஸ்ட் 16 சனிக்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 27 புதன்கிழமை – விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 5 வெள்ளி – மீலாது நபி
அக்டோபர் 1 புதன்கிழமை – ஆயுத பூசை
அக்டோபர் 2 வியாழன் – விஜயதசமி
அக்டோபர் 2 வியாழன் – காந்தி பிறந்தநாள்
அக்டோபர் 20 திங்கள் – தீபாவளி
டிசம்பர் 25 வியாழன் – கிறித்துப் பிறப்பு
இவை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.