அதிபர் தேர்தல் – தமிழ் பொதுவேட்பாளர் பரப்புரை தொடக்கம்

இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் சிங்களத் தரப்பில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது

தமிழீழத் தமிழ் மக்களின் சார்பில் பா.அரியநேத்திரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அவரை அறிமுகம் செய்து ஆதரித்து நடைபெறவுள்ள முதலாவது பொதுக்கூட்டம் இன்று மாலை ஞாயிற்றுக்கிழமை [18-08-2024] முள்ளியவளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு பா.அரியநேத்திரன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தித் தனது பரப்புரைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

பொலிகண்டி முதல் பொத்துவில் வரைக்கும் என்று பெயரிடப்பட்டுள்ள இப் பரப்புரைப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியாகவே தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பா.அரியநேத்திரன் ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.அத்துடன் தலைவர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசீர்வாதமும் பெற்றார்.

இந்நிகழ்ச்சிகளில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகள் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்,த.வசந்தராஜா,நிலாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Leave a Response