பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், ‘பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தலைவர்களிடம் காங்கிரசு பாகுபாட்டைக் காட்டுகிறது. காங்கிரசுக் கட்சியும், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ஓபிசிக்களுக்கு நீதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
ஒடிசாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரசு முன்னாள் தலைவர் இராகுல்காந்தி, மோடியின் இந்தக்கருத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில்,
பிரதமர் மோடி, பொதுப் பிரிவு சாதியில் பிறந்தவர் ஆவார். அவர் இதர பிற்படுத்தப்பட்ட சாதியில் (ஓபிசி) பிறக்கவில்லை. குஜராத் மாநிலத்தில் டெலி ஜாதியில் பிறந்தவர் ஆவார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஓபிசி என்ற அடையாளத்தைப் பெற்றார். உண்மையில் அவர் பொது சாதிப் பிரிவில் பிறந்தவர் என்பதால் அவரது வாழ்நாள் முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்க மாட்டார். இதனை ஒவ்வொரு பாஜகவினரிடம் சொல்லுங்கள் என்றார்.
தன்னுடைய முதலமைச்சர் என்கிற அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் பிறந்த,பொதுப்பிரிவில் இருந்த டெலி சாதியை இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார் என்கிற இந்தத் தகவல் சமூகநீதித் தளத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.