தமிழ்த்தேசிய ஆர்வலர் இயக்கும் படம், புத்தன் இயேசு காந்தி


“புத்தன் இயேசு காந்தி” திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. ப்ளசிங்என்டர்டெயினர்ஸ் தயாரிக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக்,மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்கிறார். வசுந்தராவும், அசோக்கும்பத்திரிகையாளர்களாக வருகிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் செயல்பாட்டாளாராக நடிக்கிறார்.

இந்த வேடத்துக்காக, மதுமிதா புக்கர் விருது பெற்ற அருந்ததிராயை முன்னுதாரணமாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறார்.இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி காணொளிகளைப்பார்த்து அந்த வேடத்துக்குத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

அண்மையில் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதநிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் கிஷோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போதுமக்கள் பிரச்சனைகளை பற்றிப் பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின்போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார். அவர் அழுது கொண்டே வசனம் பேசியது, அங்கிருந்த படப்பிடிப்புக்குக்குழுவினரை உருக வைத்து விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் எல்லோரும் கைதட்டி மதுமிதாவைப் பாராட்டினார்கள்.

சமீபத்தில் வெளியான அழகுகுட்டிசெல்லம் படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய்ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின்ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேத்சங்கர் இசையமைக்கிறார். ஆள் மற்றும் மெட்ரோ படங்களின் படத்தொகுப்பாளர் ரமேஷ் பாரதி படத்தொகுப்பு செய்கிறார்.

அறிமுக இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குகிறார். இவர் தமிழ்த்தேசிய அமைப்புகளில் இருந்து இயங்கிக்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபாதீஷ்சாமுவேல், கபிலன் சிவபாதம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்

Leave a Response