ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என்ற அக்கட்சி விருப்பத்தை தமிழ் மாநில
காங்கிரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
தற்போதைய அரசியல் சூழல், எதிர்காலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக விரும்பியது. மக்கள் நலன், கூட்டணிக் கட்சிகளின் நலனை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகள் நேற்று ஜிகே வாசனைச் சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய நிலையில், தமிழ் மாநில காங்கிரசுக் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரசுக் கட்சி போட்டியிட்டது. இந்தத் தொகுதியில் யுவாராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு இருந்தார். இப்போது அவர்கள் அதிமுகவுக்கு விட்டுக் கொடுக்கக் காரணம் பணம் தான் என்கிறார்கள்.
இடைத்தேர்தல் என்பதால் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது உட்பட ஏராளமான செலவு இருக்கிறது. அவற்றைச் செய்ய தமாகாவால் இயலாது என்பதால் அதிமுக போட்டியிட தமாகா சம்மதம் தெரிவித்துவிட்டது என்கிறார்கள்.