தில்லியில் குப்பை பொறுக்கும் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- அதிர்ச்சியூட்டும் ஆய்வு

தலைநகர் புதுடில்லியில் குப்பை பொறுக்கும் குழந் தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இரு மடங் காகி உள்ளது.

பயிற்சி மற்றும் செயல்வழி மூலம் குழந்தைகளை உயர்த்துதல் என்கிற பொருளில் அமைந்துள்ள சேட்னா என்னும் அமைப்பு இந்த ஆய்வினைச் செய்துள் ளது.

குறிப்பாக சென்ற ஆண்டு புதுடில்லியில் உள்ள தொடர்வண்டி நிலையங் களில் 224 ஆக இருந்த குழந்தைத் தொழிலாளர்கள் இந்த ஆண்டு 482ஆக இரட்டிப்பாகியுள்ளார்கள்.
குழந்தைத் தொழிலாளர்களில் மிகுதியானவர்கள் குப்பை பொறுக்குபவர்களாவர். இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் 155 குழந்தைகள் குப்பை பொறுக்குபவர்களாக உள்ள அதே சமயத்தில் மீதமுள்ளவர்கள் உணவு விடுதிகளில் கடுமையான வேலைகளில் ஈடுபட்டி ருப்பவர்களாகவும், தெருக்களில் பலூன்கள் மற்றும் இதர பொருள்களை விற் பவர்களாகவும் இருந்து உள்ளார்கள்.

அரசாங்கத்தின் கவ னத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவே சேட்னா அமைப்பு இதனைச் செய் துள்ளது. ஏனெனில், தெருக்களில் திரியும் குழந் தைகள் குறித்து அரசாங்கம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. சேட்னா அமைப்பினர் தொடர்வண்டி நிலையங்களைச் சுற்றியே தங்கள் ஆய்வினைச் செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு இங்கே நிறைந்துள்ள குழந்தைத் தொழிலாளர்களில் மிகுதியானவர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து வந்த வர்கள். அரியானா, அஸ் ஸாம், ராஜஸ்தான், ஆந்தி ரப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கத்தி லிருந்தும் குழந்தைகள் வந்திருக்கின்றன.

சேட்னா அமைப்பு தான் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் உட்பட குழந்தைகளின் நலனுக்காகப் பாடுபடும் அமைப்புகளி டம் எடுத்துச்செல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. `

`இவ்வாறு தெருக்களில் உழைக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினையை அய்.நா. அமைப்பு பரிசீலித்திட வேண்டும், என் றும் சேட்னா அமைப்பின் இயக்குநர் சஞ்சய் குப்தா கூறினார்.

 

Leave a Response