மோடியைச் சபிக்கும் மக்கள் – இன்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக பல் நாட்கள் மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை இருந்தது. மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.107.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.97.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05, டீசல் விலை ரூ.6.09 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் போடும் வாகன ஓட்டிகள் மோடியைச் சபித்துக் கொண்டே பெட்ரோல் போடுவதைப் பார்க்கமுடிகிறது.

எப்போதோ எழுதிய திருக்குறள் இன்று அப்படியே பொருந்துகிறது. அந்தக்குறள்….

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.

Leave a Response