இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது….
பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு மிகவும் தவறானது.அதற்கு உக்ரைன் போரைக் காரணம் சொல்கிறார்கள். 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்போதும் ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையேற்றம் செய்து இருப்பது வாக்கு வங்கிக்காக ஒன்றிய அரசு செயல்படுவது தெரியவந்து உள்ளது. ஏறிய ஏணியை எட்டி உதைப்பது தான் பா.ஜ.க.வின் கொள்கை. எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயம் செய்கிறது என்று கூறி வருகிறார்கள். ஒன்றிய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் உள்ளன. எனவே மக்களை ஏமாற்றுகிறார்கள். இந்த விலை உயர்வுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.