வன்னிய இளைஞர்களை சமூகவிரோதிகளாகச் சித்தரிப்பதா? – மருத்துவர் இராமதாசுக்கு எதிர்ப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10,2022 ஆம் நாள் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், பா.ம.க மாணவர் அணியின் மாநிலத் செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக்கடிதத்தில், ‘திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02 ஆம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் த.செ.ஞானவேல் இயக்கிய திரைப்படத்தை 2டி நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருந்தார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஐ அந்தோணிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர்.

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்துவரும் சூர்யாவின் திரைப்படத்தை, அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி இராமசுகந்தன் கூறியிருப்பதாவது….

பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் மீண்டும் வன்னிய இளைஞர்களை சரியான முறையில் வழிநடத்தாமல் சமூக விரோதிகளாக மற்ற சமூகத்தினர் இடையே சித்தரிப்பது சமுதாயத்திற்கு நல்லதல்ல ! ராமதாஸ் மற்றும் அன்புமணி இந்த சமுதாயத்தின் கேடுகள்

என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Response