சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிங்களர் – எதிர்ப்பு எழுகிறது

ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடங்கவிருக்கிறது. இதற்கான அணிவீரர்களைத் தேர்வு செய்து ஏலம் எடுக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அதில் எல்லா அணி வீரர்களும் இறுதி செய்யப்பட்டனர்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றோர் பட்டியல்..

எம்.எஸ்.தோனி (அணித்தலைவர்), ருதுராஜ் கைக்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு (கீப்பர்), டேவோன் கான்வே, சுப்ரான்சு சேனாதிபதி, ஹரி நிஷாந்த், நாராயன் ஜெகதீசன்(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டுவைன் பிராவோ, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ட்வயன் பீட்ரஸ், மிட்செல் சான்ட்னர், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, தீபக் சஹர், கே எம் ஆசிப், துசார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்சனா, ஆடம் மில்னே, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சலோங்கி

ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் மகேஷ் தீக்சனா இலங்கை அணியைச் சேர்ந்த சிங்களர். எனவே, தமிழினப் படுகொலை செய்த சிங்களரை தமிழக அணியில் சேர்க்கக்கூடாது அவரை நீக்கவேண்டும் என்கிற குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

சென்னை அணி என்ன செய்யப்போகிறது?

Leave a Response