முன்னாள் முதலமைச்சரின் பேத்தி திடீர் தற்கொலை – பெங்களூருவில் பரபரப்பு

கர்நாடக மாநில பாரதிய சனதாக் கட்சியின் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா இன்று (வெள்ளிக்கிழமை ) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.

சவுந்தர்யா, மத்திய பெங்களூருவில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பயிற்சி மருத்துவரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த சக மருத்துவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். சவுந்தர்யாவுக்கு 6 மாத குழந்தை உள்ளது.

இந்நிலையில், சவுந்தர்யா தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

திடீரென தற்கொலை செய்துகொண்ட சவுந்தர்யா, எடியூரப்பாவின் பேத்தி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response