தெலுங்கு, கன்னட மற்றும் நடுவண் அரசுப் பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கட்டாயமாக்கவேண்டும்

 

மாணவர்களிடையே நாட்டுபற்றை ஊக்குவிக்கும் விதமாக சி.பி.ஸ்.சி பள்ளிகளில் வங்களா மொழியில் இயற்றப்பட்ட இந்திய தேசிய கீதத்தை ஒவ்வொரு நாளும் காலையில் மாணவர்கள் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நடுவண் அரசு. மாநில அரசுகளும் இதை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது நடுவண் அரசின் பள்ளி கல்வித் துறை. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும்  என்று தமிழர் பண்பாடு நடுவம் வலியுற்த்தியுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது….

மாணவர்களிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக சி.பி.ஸ்.சி பள்ளிகளில் வங்களா மொழியில் இயற்றப்பட்ட இந்திய தேசிய கீதத்தை ஒவ்வொரு நாளும் காலையில் மாணவர்கள் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நடுவண் அரசு. மாநில அரசுகளும் இதை பின்பற்றலாம் என்று கூறியுள்ளது நடுவண் அரசின் பள்ளி கல்வித் துறை.

உண்மையில் மாணவர்களிடையே நாட்டுப் பற்று வர வேண்டுமெனில் வங்காள மொழியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட இந்திய தேசிய கீதம் அந்தந்த மாநில மொழியில் மொழி பெயர்த்துத் தான் பாடப்பட வேண்டும் . மேலும் அப்போது இயற்றிய இந்திய தேசிய கீதம் பிழையானதாகும் . பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்தையும் அது குறிக்கிறது. மொழி வழி மாநிலங்கள் பிரிந்த பிறகு வரையறுக்கப்பட்ட ஆந்திரம் , கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளை இந்த தேசிய கீதம் குறிக்கவில்லை . பொதுவாக திராவிடம் என்று குறிக்கிறது . திராவிடம் என்ற எந்த நிலப்பகுதியும் தற்போது இல்லாத நிலையில் திராவிடம் என்ற இடத்தை தேசிய கீதத்தில் இருந்து நீக்கவும் வேண்டும் . இப்படியான திருந்தங்களை மேற்கொண்டால் மாணவர்களுக்கு இந்திய துணைக்கண்டம் பற்றியான விழிப்புணர்வு வரும். இந்தியா என்பது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்ற உண்மையை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அடுத்ததாக , தமிழகத்தில் உள்ள பல நடுவண் அரசுப் பள்ளிகளில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவது இல்லை. தமிழையே கற்றுக் கொடுக்காத நடுவண் அரசுப்பள்ளிகள் தான் இங்கு ஏராளம் . இந்தியை மட்டும் கட்டாயப் பாடமாக்கி தமிழர்களுக்கே தமிழைக் கற்றுக் கொடுப்பதில்லை நடுவண் அரசுப் பள்ளிகள். இப்பள்ளிகள் எவையும் மாணவர்களுக்கு தமிழ்நாட்டைப் பற்றியோ தமிழ் மொழியின் பெருமையைப் பற்றியோ சொல்லிக் கொடுப்பதில்லை . இப்படியான மாணவர்கள் தமிழ்நாட்டில் உருவாகும் காரணத்தால் இவர்களுக்கு இயல்பாக தமிழ்ப் பற்றும் தமிழ்நாட்டுப் பற்றும் உருவாகுவதில்லை.

இந்த நிலையைக் களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற ஆணையை தமிழக அரசு உடனே பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் செயல்படும் தெலுங்கு, மலையாள, கன்னட, ஜெயின் , இந்தி , நடுவண் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்த் தாய் வாழ்த்தை ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் பாடப்பட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் பண்பாட்டு நடுவம் அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.

 

Leave a Response