அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது

தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியது.

தொடக்கம் முதலே எல்லா மாவட்டங்களிலும் முன்னிலை வகித்த திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதிமுக முன்னெப்போதையும் விடப் படுதோல்வி அடைந்துள்ளது.ஒன்றிய அரசை ஆளும் பாஜகவும் பெருந்தோல்வி அடைந்துள்ளது.

இதுதொடர்பாக, பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திமுக வானை நோக்கி உயர்கிறது; அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது; பாஜகவிற்கு பாடை தயாராகிறது.! வாழ்க வாக்காளர்கள்.! என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் அதிமுக சசிகலா தலைமையை நோக்கி நகர்கிறது என்று சொல்லியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response