இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையைப் பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலையில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை இலிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.

அதிலிருந்து, சென்னையில் பெட்ரோல் இலிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் இலிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில்,செப்டம்பர் 28 அன்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. 23 நாட்களுக்குப்பிறகு 19 காசுகள் உயர்ந்து, இலிட்டருக்கு ரூ.99.15 ஆகவும், டீசல் இலிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.94.17 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று விலை மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இலிட்டருக்கு 21 காசுகளும், டீசல் இலிட்டருக்கு 28 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு விலையைக் குறைத்தாலும் ஒன்றிய அரசு விலையை உயர்த்துகிறது என்று மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.

Leave a Response