சீமானுக்கு திருமாவளவன் நன்றி

சேலம் மாவட்டம் கே.மோரூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்ற அனுமதி மறுத்து, அக்கட்சியினர் மீது தடியடி நடத்திய சேலம் மாவட்ட காவல்துறையைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விடுதலைச்சிறுத்தைகள் மீதான காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செப்டம்பர் 24 அன்று அறிக்கை வெளீயிட்டிருந்தார்.

அந்த அறிக்கையைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,

மோரூர் பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்த காவல்துறையின் ஒருசார்பு நிலையிலான பாகுபாட்டையும் சாதி வெறியர்களையும் கண்டித்த அன்புச் சகோதரர் சீமான் அவர்களுக்கும் எஸ்டிபிஐ தலைவர் அன்புச் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Response