உத்தவ்தாக்கரே போல் மு.க.ஸ்டாலினும் மம்தாவும் செய்தால் என்னாவது? – மோடி அரசு அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தை சிவசேனா கூட்டணி ஆட்சி செய்துவருகிறது.அக்கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்தே ஒன்றிய பாஜக அரசு பல்வேறு மோதல் போக்குகளைக் கடைபிடித்து வருகிறது.

அண்மையில்,ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே பேச்சு பெரும் சர்ச்சைக்கு வழி ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் பேசியதாவது…

நாடு சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்ற விவரம் கூட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குத் தெரியவில்லை. சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். உரையின் பாதியில், தனது உதவியாளரிடம் அதனைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

இது அவமானமாக உள்ளது. சுதந்திர தின உரையின்போது அவருக்கு எத்தனையாவது ஆண்டைக் கொண்டாடுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள உதவியை நாடிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவைக் கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினருக்கும், சிவசேனா தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

சிவசேனா மற்றும் பாஜக தொண்டர்கள் மும்பையில் மோதிக் கொண்டனர். நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

நாசிக் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது ஒன்றிய அமைச்சரைக் கைது செய்யவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதனையடுத்து அவர் தன் மீதான நடவடிக்கைக்கு இடைக்கால தடைகோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் இந்த வழக்கை அவசர வழக்காகவ விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதனையடுத்து நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். அவரை சங்கேமஸ்வர் அழைத்துச் செல்ல ரத்னகிரி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது ஒன்றிய அரசையும் மோடியையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளதாம்.

ஒன்றிய அமைச்சரை மாநில அரசு கைது செய்திருப்பது அம்மாநிலத்தில் மட்டுமின்றி ஒன்றிய அளவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே போல தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, கேரள முதல்வர் பின்ராயிவிஜயன் ஆகியோரும் களத்தில் இறங்கிவிட்டால் ஒன்றிய அரசின் பாடு திண்டாட்டமாகிவிடுமென்று பகரும் கருத்து சொல்லிவருகின்றனர்.

Leave a Response