இயல் இசை நாடக மன்றத் தலைவராகிறார் சாலமன் பாப்பையா

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராக இசையமைப்பாளர் தேவா இருக்கிறார். 2014 ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இவர் இந்தப் பொறுப்பை வகித்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இசையமைப்பாளர் தேவாவை இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார்.

இப்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் இயல் இசை நாடக மன்றத் தலைவர் பொறுப்பு உட்பட பல்வேறு பொறுப்புகளுக்குப் புதியவர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி, இயல் இசை நாடக மன்றத் தலைவர் பொறுப்புக்கு பேராசிரியர் சாலமன் பாப்பையாவை மு.க.ஸ்டாலின் தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response