தமிழ்வழி கருவறைப் பூசைக்கு தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும், போலிச் சாமியார் ஜக்கியின் ஈஷா யோகா மையத்தை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 03.07.2021 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் “தெய்வத் தமிழ்ப் பேரவை” சார்பில் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
அதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில்களில் வழிபாட்டு மொழி தமிழாக இல்லை. எனவே கருவறை மந்திரம், அர்ச்சனை, வேள்விச் சாலை, கோயில் கலச குடமுழுக்கு ஆகியவை தமிழ் மந்திரங்களிலேயே நடைபெற வேண்டும், மாவட்டங்கள் தோறும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் நிறுவப்பட வேண்டும், அர்ச்சகர் பயிற்சி முடித்துவிட்டு காத்துக் கொண்டிருக்கும் அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கும் பணிகள் வழங்கப்பட வேண்டும், சுற்றுச்சூழலை அழித்து நாசமாக்கி – தமிழர் ஆன்மிகத்திற்கும் எதிராகச் செயல்படும் ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் பூசகர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் கொரோனா கால நிவாரண நிதி வழங்கப்படுவதைப் போல் அறநிலையத்துறைக்கு வெளியிலுள்ள திருக்கோயில் பூசகர்களுக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் எழுச்சியுடன் நடைபெற்றது.
தஞ்சை
தஞ்சையில் பனகல் மாளிகை அருகில், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் நடைபெற்ற போராட்டத்தில், பல்வேறு ஆன்மிக அன்பர்களும், தமிழின உணர்வாளர்களும் எழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை முன்னிலை வகித்தார்.
தோழர் அரங்க. குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சி கழகம்), திரு. க.கா.இரா. இலெனின் (தலைவர் பேரழிவிற்கு எதிரான பேரியக்கம்), முத்தையா (கறம்பக்குடி வள்ளலார் மன்றம்), தமிழ்ச்செல்வி (கறம்பக்குடி வள்ளலார் மன்றம்), இராசமாணிக்கம் (தஞ்சை வள்ளலார் மன்றம்), திருப்பூந்தூர்த்தி உறுதிமொழி கோவிந்தராஜன், தமிழ்த்தேசியப் பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ. இராசேந்திரன், த. மணிமொழியன் (காவிரி உரிமை மீட்புக் குழு), க. ஜெகதீசன் (தமிழக விவசாயிகள் சங்கம்), துரை. இரமேசு, விசிரி சாமியார் முருகன், திரு. இரவி (வணிகர் சங்கப் பேரவை), வாசு (தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை), வி.சி.முருகையன் (தமிழக மக்கள் புரட்சி கழகம்), இரவிச்சந்திரன் (வேளாண் சங்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
சென்னை
சென்னை அசோக் நகர் உதயம் திரையரங்கம் எதிரில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா. கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் “செந்தமிழ் ஆகம அந்தணர்” திரு. சிவ. வடிவேலன் அவர்கள் செந்தமிழில் திருமுறைப் பாடல்களைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஆவடி – தமிழ்ச்சைவப் பேரவைத் தலைவர் திருவாட்டி. கலையரசி நடராசன் அம்மையார், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், இரா. இளங்குமரன், வெற்றித்தமிழன், திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு, நடுவண் கிளைச்செயலாளர் தோழர் மு. வடிவேலன், பல்லாவரம் கிளைச் செயலாளர் தோழர் மு. கவியரசன், தென்சென்னை கிளைச் செயலாளர் தோழர் மு.வெ. இரமேசு, வடசென்னை கிளைச்செயலாளர்.தோழர் செந்தில், தியாகராய நகர் கிளைச்செயலாளர் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், ஆவடிக் கிளைச்செயலாளர் தோழர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி
புதுச்சேரி இராசா திரையரங்கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாசு சந்திரபோசு தலைமை தாங்கினார். தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் விசயகணபதி, தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பம்பை உடுக்கை, தாரை தப்பட்டை உள்ளிட்ட சிவனுக்குரிய “தெய்வ இசை” வாத்தியங்களோடு நிகழ்வு பேரெழுச்சியாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திருக்கயிலாய வாத்திய சிவனடியார் திருக்கூட்டம் தலைவர் திரு. இரா. சிவ சுரேசு, அரியாங்குப்பம் திரு. சிவயோகியார், சிவனடியார் இராமலிங்கம், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி தலைவர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க செயலாளர் தோழர் த. இரமேசு, நா.த.க. பொருளாளர் திரு. ம.செ. இளங்கோவன், மகளிர் பாசறை பொறுப்பாளர் திருமதி. பா. கௌரி, சிந்தனையாளர் பேரவை திரு. கோ. செல்வம், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் புதுவைத் தமிழ்நெஞ்சன், பேராசிரியர் ஆனந்தன், ஐந்தொழிலாளர் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் திரு. தே. சரவணன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் க. அருணபாரதி, ஐயா முருகவேல், தோழர்கள் சத்தியமூர்த்தி, பட்டாபிராமன், பெருமாள், அசோக்ராசு, மணி, தொரவி முருகன், முத்து, ஐயா ஆறுமுகம், தங்கதுரை, புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் உதயசங்கர், மகளிர் ஆயம் செல்வி, புவனா, தமிழழகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருவள்ளுவர் சிலை முன்பு தெய்வத் தமிழ்ப் பேரவை மதுரை அமைப்பாளர் தோழர் கதிர்நிலவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், குச்சனூர் இராசயோக குரு பீட மடாதிபதியுமான ஐயா குச்சனூர்கிழார் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் இரெ. இராசு முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். பதினெண்சித்தர் பீடம் – அருளாட்சி மையத்தின் நிர்வாகிகள் சிவனடியார் சி. சவகர் பழனியப்பன், சிவனடியார் வை.ந.சி. மோகன், தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலாளர் திரு. இராமச்சந்திரன், இராமசுப்பு, தமிழக முன்னேற்றக் கழக நிறுவனர் திரு. மா.து. இராஜ்குமார், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திரு. சு. அருணாசலம், திரு. கு.ஞா. பகத்சிங், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் மதுரை அருணா, துணைத்தலைவர் பே. மேரியம்மா, மாவட்ட அமைப்பாளர் இளமதி, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தோழர் விடியல் சிவா, தோழர்கள் மு. கருப்பையா, கரிகாலன், அறிவழகன், புருசோத்தமன், தமிழ்மணி, தியாகலிங்கம், சீமான் அன்னராசு, இலக்கியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவரங்கம்
திருச்சி மாவட்டம் – திருவரங்கம் அருள்மிகு. அரங்கநாதர் திருக்கோயில் இராசகோபுரம் வாயில் முன்பு தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் பொறியாளர் முத்துக்குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாய சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாவட்டச் செயலாளர் வே.க. இலக்குவன், பொதுக்குழு தோழர்கள் இனியன், வெள்ளம்மாள், திருவெறும்பூர் நகரச்செயலாளர் பாசுகரன், பாவலர் நா. இராசாரகுநாதன் (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை) வழக்கறிஞர் இரவிக்குமார், தோழர்கள் சுரேந்தர், தமிழ்ச்செழியன், பாரி மன்னன் (நா.த.க.), வீரமணி (ம.தி.மு.க.), திருவெறும்பூர் தோழர்கள் தியாகராஜன், அழகர்சாமி, கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்
கடலூர் மாவட்டம் – சிதம்பரத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தெய்வத்தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் முனைவர் வே. சுப்பிரமணிய சிவா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு திருக்கோவில் பூசாரிகளும், தமிழுணர்வாளர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆ. குபேரன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். த.தே.பே. சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் இரா. எல்லாளன், தோழர்கள் க. வேந்தன் சுரேசு, அ. கலைச்செல்வன், சு. சுகன்ராஜ், பா. பிரபாகரன், சக்திவேல், ச. அஜய்பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடந்தை
தஞ்சை மாவட்டம் – கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் “மெய்கண்ட சிவம்” ஐயா இறைநெறி இமயவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமை செயற்குழுப் உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். பூசாரிகள் நலச்சங்க மாவட்டச் செயலாளர் திரு. சொ. கார்த்தி, சிவனடியார்கள் சூர்யா, த.தே.பே. பொதுக்குழுப் உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
செங்கிப்பட்டி
தஞ்சை மாவட்டம் – பூதலூர் ஒன்றியம் – செங்கிப்பட்டி முதன்மைச்சாலையில் தமிழ்த்தேசியப் பேரியக்க பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் பி. தென்னவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், வள்ளலார் வழிபாட்டாளர் ஐயா சுந்தர்ராஜன், த.தே.பே. பூதலூர் ஒன்றியக் குழு தோழர்கள் தோழர் இரெ. கருணாநிதி, க. காமராசு, ச. அருள்தாசு மற்றும் த.தே.பே. தோழர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்றனர்.
திருமுதுகுன்றம்
கடலூர் மாவட்டம் – திருமுதுகுன்றத்தில் உழவர் சந்தை அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிவனடியார் பூவனூர் தனபால், சிவனடியார் கோட்டேரி சிவக்குமார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. அஞ்சை ம. இராவணன் ஆகியோர் உரையாற்றினர். இளம் சிவனடியார் இளவரசன் நன்றி கூறினார். திரளானோர் பங்கேற்றனர்.
ஓசூர்
கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூரில் இராம் நகரில் தெய்வத் தமிழ்ப் பேரவை ஓசூர் செயலாளர் திரு. ஸ்டாலின் தலைமையில் நடந்த போராட்டத்தில் தோழர்கள் சுப்பிரமணி, துரைமுருகன், மைலான் லேபரட்டரிஸ் தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் திரு. வெங்கடேசன், வினோத் உள்ளிட்டோரும் மகளிர் ஆயம் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, தமிழ்த்தேசியப் பேரியக்க நகரச்செயலாளர் தோழர் முருகப்பெருமாள், தோழர் வனமூர்த்தி ஆகியோர் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். நிறைவில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.
ஈரோடு
ஈரோடு – வெள்ளிக்குட்டையிலுள்ள யோக சித்தர் ஆலயத்தில் யோக சித்தர் அசோக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், திருவாளர்கள் சென்னியப்பன் (சிவன் கோவில் தமிழ்வழி அர்ச்சகர்), இறைவழி மருத்துவர் – சிவனடியார் அண்ணபூரனி, இராகவன் (ழகரம் சிலம்பாட்டக் குழு), குமரேசன் (கண்ணகி வழிபாட்டுக் குழு), தோழர்கள் ஆறுமுகம், தங்கமணி, ஜூலி, ஜெயலட்சுமி, அருளொளி, முரளி, பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ. இளங்கோவன் முன்னிலை வகித்தார். முன்னதாக தோழர் மகிழன் வரவேற்க, நிறைவில் திரு. பார்த்திபன் நன்றி கூறினார்.
கோவை
கோவையில் வடவள்ளி காமராஜ் தெருவில் நடந்த போராட்டத்தில் மாற்று எரிசக்தி மற்றும் ஊரக வளர்ச்சி (NERD)தொண்டு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் பேராசிரியர் காமராசு தலைமையில் நிர்வாகிகள் திருமதி. சத்யஜோதி, கீதா, சங்கீதா, இன்னாசியம்மாள், மணிமாலா, தேவி சங்கீதா, சபிதா, அருணாச்சலம், மதன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்க கோவை செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். புதிய இளையத்தலைமுறை நிறுவனத் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன், சிங்காநல்லூர் த.தே.பே. செயலாளர் தோழர் தெள்ளியன், வழக்கறிஞர் சிவசாமித்தமிழன் (முருகசேனை), எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தோழர் திருவள்ளுவன் முழக்கங்கள் எழுப்பினார். தோழர்கள் கணேசன், இராசேசுக்குமார், சுவேதா, விசயலட்சுமி, ஐயப்பன், சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் – காளையிர்கோவிலில், கோயில் திடலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் கர்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு, தோழர்கள் ச.மீ. இராச்குமார் (தமிழக மக்கள் மன்றம்), பாவெல் (இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்), இளையவன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி), தமிழ் கார்த்தி (பச்சை தமிழகம்), இரவி (பச்சைத் தமிழகம்), செல்வராசு (தமிழர் தேசிய முன்னணி), காம்பூர் செல்வராசு (பறம்புமலை பாதுகாப்பு இயக்கம்), இரா. இரவி (மக்கள் பாதை), இளஞ்சென்னியன் (தமிழிய சிந்தனைக்களம்) உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
சேலம்
சேலத்தில் சத்தியபாமா அறக்கட்டளை நிறுவனர் சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்கள் தலைமையில், மேச்சேரி – நெசவாளர் குடியிருப்பு, மரவனேரி அணைமேடு, தம்மநாயக்கன்பட்டி கிராமம் அருள்மிகு எட்டுக்கை அம்மன் கோயில் ஆகிய இடங்களில் கோரிக்கைப் பதாகை ஏந்தி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்க சேலம் பொறுப்பாளர் தோழர் கல்யாணசுந்தரம், பாண்டியன், சத்தியபாமா அறக்கட்டளை செயலாளர் நரேந்திரபாரதி, பொருளாளர் தமிழ்மணி, இயக்குனர்கள் அரவிந்தசாமி, திவ்யபாரதி, பூசகர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கீரனூர்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் ஐயா துரை. மதிவாணன், பொறிஞர் அகன் (பாவாணர் மன்றம்), தோழர் மு. ஜெய்சங்கர், தோழர் செ. ஆரோக்கியராஜ், சன்மார்க்க சங்க மாவட்டத் தலைவர் திரு. மின்னாத்தூர் லாபராசு, திரு. ஆறுமுகம் ஐயா, திரு கிருஷ்ணன், திரு பரமசிவம், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொறுப்பாளர்கள் தோழர் சி. ஆரோன், தோழர் இலட்சுமணன், இலெ. திருப்பதி நாம் தமிழர் கட்சித் தோழர்கள் சொ. சதாசிவம், கி. பாலு, அ. இராஜ்குமார், கோபி, முகமது ப்ரோசு, பால சுப்ரமணியன், சீகாந்த், பொன் மகேந்திரன், குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தோழர் கி. பாலு நன்றி கூறினார்.
வத்தலகுண்டு
திண்டுக்கல் மாவட்டம் – வத்தலக்குண்டில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு கட்டக் காமன்பட்டியைச் சார்ந்த ஊர் பெரிய தனம் திரு. லோகநாதன் தலைமை தாங்கினார். பழைய வத்தலக்குண்டைச் சார்ந்த திரு. பெ. கருப்பையா குடும்பனார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், திருவாளர்கள் பொ. சந்தோஷ்குமார் என்ற சங்கர், செ. சந்தோஷ், உச்சப்பட்டி பெரியவர் பிச்சைமணி, எழுவனம்பட்டி வீரன், கன்னிமார்கோவில்பட்டி தனுஷ்கொடி, பழைய வத்தலக்குண்டு பகுதியைச் தனசேகரப் பாண்டியன், பார்வதி, இலட்சுமி, பிரியா, சந்திரா, சரசம்மாள், கிருஷ்ணன் கட்டக்காமன்பட்டி – யோகேஸ்வரன், சுபாஷ் சந்திரபோஸ், நவீன், பிரவின் பிரதீப், சாந்தி, அழகம்மாள், முருகன், கவியரசு பாலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரு. சேகர் நன்றி கூறினார்.
விராலிமலை
புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலையில் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் செயற்குழு உறுப்பினர் வே.பூ. இராமராசு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தெய்வத் தமிழ் பேரவை அன்பர்கள் முருகேசன், ஆனந்தன், தர்மலிங்கம், மதியழகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரு. முனியப்பன் கோரிக்கை முழக்கமெழுப்பினார். திருக்குறள் கிருட்டிணமூர்த்தி, விராலிமலை முருகேசன், ஆனந்தன் ஆகியோர் கோரிக்கை குறித்து உரையாற்றினர்.
குமாரபாளையம்
நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில், தெய்வத்தமிழ்ப் பேரவை பொறுப்பாளர் ஐயா நா. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வழக்கறிஞர் இரா. பாரதி சிறப்புரையாற்றினார். தோழர்கள் கார்த்திகேயன், கிருஷ்ணகுமார், கந்தகுரு PA மாதேஸ்வரன், நா. அன்பழகன், ஆ. பகலவன், சண்முகம், ப.கொ. பாலசுப்ரமணியன், அறிவொளி சரவணன், விஸ்வநாதன் (ம.தி.மு.க.), சிவக்குமார், சண்முகம் (சி.பி.எம்.) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பெண்களும் பங்கேற்றனர்.
வெண்ணந்தூர்
நாமக்கல் மாவட்டம் – வெண்ணந்தூர் பேரூராட்சியில் பெரிய மாரியம்மன் கோயில் திடலில் பூசகர் திரு. சுந்தர்ராசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பூசகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். தமிழ்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர் ஐயா தங்கவேலு முன்னிலை வகித்தார். கிளைப் பொறுப்பாளர் தோழர் அகத்தாய்வன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் – மேலமைக்கேல்பட்டி மாரியம்மன் கோயில் முன்பு தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்ரமணியன் தலைமையில் நடந்த போராட்டத்தில், பூசகர் சீனுவாசன், திருவாளர்கள் அன்பழகன், கொளஞ்சிநாதன், இராதாகிருஷ்ணன், சூரியா, முருகன், கணேசன், சந்துரு, சந்தியா மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் – பந்தலூரில் கடைவீதியிலுள்ள திருமுருகன் கோயில் முன்பு தெய்வத் தமிழ்ப் பேரவை நீலகிரி ஒருங்கிணைப்பாளர் தோழர் தமிழ் பா. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த போராட்டத்தில், நாம் தமிழர் கட்சி நீலகிரி மாவட்டச் செயலாளர் திரு. பொன் மோகன்தாசு, வீரத்தமிழர் முன்னணி அமைப்பாளர் திரு. இந்துபாலன் உள்ளிட்ட பங்கேற்றனர்.
குரும்பூர்
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டத்திலுள்ள குரும்பூரில் கடை வீதியில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தோழர்கள் விஜய நாராயணப் பெருமாள், சிவக்குமார், விக்னேசு, முகேஷ், விடுதலைவேந்தன், சத்தியா, செல்வி, யோகலெட்சுமி, தங்கம், இராஜலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆற்காடு
விழுப்புரம் மாவட்டம் – கண்டாச்சிபுரம் வட்டத்திலுள்ள ஆற்காடு கிராமத்தில் மந்தக்கரை பகுதியில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர் தோழர் இராகுல் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் புகழரசு, தினேசுக்குமார், பாலாசி, தரணிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மானூர்
திருநெல்வேலி மாவட்டம் – மானூரில் ஊாராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், “ஆசீவகம் – சமய நடுவத்தின் இருக்கை முதல்வருமான ஆசீவக ஐயன் சுடரொளி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கோரிக்கை முழக்கப் போராட்டம் புளியங்குடியில் நகராட்சி அலுவலகம் அருகில் தோழர் க. பாண்டியன் தலைமையிலும், இராயகிரியில் மாரியம்மன் கோயில் அருகில் தோழர் இராசு தலைமையிலும், தலையணை மலை கிராமத்தில் திரு. பால் தினகரன் தலைமையிலும் நடைபெற்றது. சொக்கையா பாண்டியன், தங்கமலை, ஆசிர், செல்லம்மாள், உமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொத்தமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம் – கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் முன்பு தெய்வத் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் சி. அன்பரசன் தலைமை ஏற்றார். திருவாளர்கள் தங்கசாமி, விக்னேசு, கோபால், அகத்தியன், ஜெயக்குமார், புவனேசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூரில் ஐயா சுந்தரராசு அடிகளார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை திருப்பூர் ஒருங்கிணைப்பாளர் தோழர்,சிவக்குமரன், தமிழ்த்தேசியப் பேரியக்க திருப்பூர் செயலாளர் தோழர் ஸ்டீபன்பாபு, அவிநாசி செயலாளர் தோழர் பிரசாந்த், தோழர்கள் சரவணன், பாண்டியராசு, இரவி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகில் திருவாரூர் முதன்மைச் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா. செயபால், ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் தனஞ்செயன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் ப. சிவவடிவேலு, மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி, தோழர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் – சீர்காழியில் திரு. பு. கோபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்க சீர்காழி செயலாளர் தோழர் செ. அரவிந்தன், பூசகர்கள் விக்னேசு, சிவராமன், செல்வம், திரு. இராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் – திருவில்லிபுத்தூர் நகர் வடக்கு ரத வீதியில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் செயற்குழு உறுப்பினர் ஐயா சிவ. வெ. மோகனசுந்தரம் ஒருங்கிணைப்பில் நடந்த போராட்டத்தில் திருவாளர்கள் இராமர் பிள்ளை, பாசுக்கர், க. சண்முகசுந்தரம், முத்துமாணிக்கம், முத்துசிவா, ஐயனார், திருமதி சங்கரம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர்
கரூர் வெங்கமேட்டில், தெய்வத் தமிழ் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் திருவாளர்கள் சாமியப்பன், சண்முகம், பச்சையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காரணோடை
சென்னை செங்குன்றம் அருகிலுள்ள காரணோடையில் பதினெண் சித்தர் மடத்தைச் சேர்ந்த கடவுளை வழிபடுவோர் கழகத்தின் அரசயோகி கருவூறார் அருட் கோட்டத்தில் சித்தர் மூங்கிலடியார், சித்தர் வான்மீகிநாதர் மற்றும் சித்தரடியார்கள் போராட்டக் கோரிக்கைகளை முன்வைத்து, செந்தமிழ் மந்திரங்களை ஓதி, பெண்களே முன்னின்று மேற்கொண்ட சிறப்பு வேள்வியை நடத்தினார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இம்முழக்கப் போராட்டம் தெய்வத் தமிழ்ப் பேரவையின் முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பானது. அதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு ஆதரவுக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு தெய்வத் தமிழ்ப் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.