தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவரை 30.5.2021 அன்று காலை ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக சங்க
செயலாளர் நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் ஜீவாதங்கவேல் தலைமையில்,
துணை தலைவர் தூர்தர்சன் செய்தியாளர் மூர்த்தி,
பொருளாளர் தினமணி புகைப்படக் கலைஞர் ரவிச்சந்திரன்,துணைச்செயலாளர் ஜீ.வி, நிருபர் நவீன்,
செயற்குழு உறுப்பினர்கள் செய்தியாளர்கள் கலைஞர் டி.வி. பழனிச்சாமி,விடுதலை சண்முகம்,
தினகரன் மகேந்திரன்,
சத்தியம் டி.வி. வேலுச்சாமி உள்ளிட்ட
நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.
பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கு நன்றி தெரித்ததோடு,
முதல்வராகப் பதவி ஏற்று முதல் முறையாக தலைவர் கலைஞரின் குரு குலமான ஈரோடு பெரியார் மண்னுக்கு வருகை தந்ததற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும்,
முதல்வர் நிவாரண நிதிக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
அதற்கு, முதல்வர் சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வரிடம்,
1) மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசு அங்கீகார அட்டை(Accredation Card) வழங்க வேண்டும்.
2) தாலுகா அளவில் பணிபுரியும் அணைத்து நிருபர்களுக்கும் 5 ஆயிரம் ஊக்க தொகை வழங்க வேண்டும்,
3) பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீத கட்டண சலுகை ஆந்திர அரசு வழங்குவதை போல் வழங்க வேண்டும்
4) கொரோணாவால் மறைந்த கோபிசெட்டிபாளையம் புதிய தலைமுறை செய்தியாளர் சந்திரசேகர் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டி….
என நான்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.
கனிவுடன் பெற்றுக் கொண்டார் முதல்வர்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க.வின் துணை பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் உடனிருந்தார்.