எதிர்ப்புகள் எழுந்ததால் மதுக்கடைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இதனிடையே, தமிழக அரசின் புதிய விதிமுறைகளில் மதுக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாதது குறித்து கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன்பின், ஞாயிற்றுகிழமை மதுக் கடைகள் மூடப்படும் என்றும் மற்ற நாட்களில் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட 14 விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்ற வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

கொரோனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருவதால், இன்று முதல் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் மதுக்கடைகள் உடன் இணைந்து செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response